அகா அருவி

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 04:38, 10 பெப்பிரவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (கி.மூர்த்தி, ஆக்கா அருவி பக்கத்தை அகா அருவி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அகா அருவி (Akaa Falls) மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது. கொஃபோரிடுவாவிற்கு வடகிழக்கே 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அகுபெம் வடக்கு மாவட்டத்தில் உள்ள அக்யெரெமண்டெங் கிராமத்திற்கு அருகில் இந்த அருவி அமைந்துள்ளது.[1] அழகான நீர்வீழ்ச்சியைத் தவிர இங்குள்ள அசாதாரணமான பாறை அமைப்புகளும் பார்ப்பதற்கு ஓர் அற்புதமான காட்சியாகும். நீரின் அளவு அதிகமாக இல்லாத வறட்சிக் காலங்களில் இந்தப் பாறைகளின் அழகு இன்னும் அதிகமாகத் தெரியும்.

ஆக்கா அருவி
Akaa Falls
படிமம்:Aka falls - Ghana - West Africa.png
Map
அமைவிடம்ஆகா , அகுபெம் வடக்கு மாவட்டம், கிழக்கு மண்டலம், கானா
ஆள்கூறு6°10′30″N 0°11′46″W / 6.17503°N 0.19614°W / 6.17503; -0.19614

போடி நீர்வீழ்ச்சியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகா அருவி அதற்கான நீரை போடி ஆற்றில் இருந்து எடுக்கிறது. போடி அருவியும் அதற்கான நீரை போடி ஆற்றில் இருந்தே எடுக்கிறது.[2]

மேற்கோள்கள்

  1. "Akaa Falls" (in en-gb). Graphic Online. https://www.graphic.com.gh/news/general-news/ghana-news-akaa-falls.html. 
  2. "Visit Ghana - Akaa Falls". Visit Ghana (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-01-30.
"https://tamilar.wiki/w/index.php?title=அகா_அருவி&oldid=236401" இலிருந்து மீள்விக்கப்பட்டது