உதய்பூர்

imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 09:51, 14 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Sumathy1959 பக்கம் உதயப்பூர்உதய்பூர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உதயப்பூர் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்டத்தின் தலைமையிடமாகவும் விளங்குகிறது. முன்னர் இந்நகரம் இராஜபுத்திர குலத்தின் மேவார் இராச்சியத்தின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான ஏரிகள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் கோட்டையுடன் ஆரவல்லி மலை தொடரில் அமைந்துள்ளது. உதயப்பூரை நகரத்தை உருவாக்கியவர் மேவார் அரசர் மகாராணா உதய் சிங் ஆவார். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிகாலத்தில் இராஜபுதனம் முகமையின் கீழ் உதய்பூர் இராச்சியம் சுதேச சமஸ்தானமாக 1947 இந்திய விடுதலை வரை இருந்தது.

உதயப்பூர்

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
நாடு இந்தியா
படிமம்:Udaipur-citypalace.jpg
உதய்ப்பூர் அரண்மனை

இங்குள்ள ஏரிகள்:

  • பதே சாகர் ஏரி (Fateh Sagar Lake) - 1678 இல் இதை உருவாக்கியவர் மகாராணா ஜெய் சிங். பின்பு மகாராணா பத்தே சிங் இதை விரிவாக்கி மீள்கட்டமைத்தார்.
  • பிச்சோலா ஏரி (Lake Pichola )- இதை உருவாக்கியவர் மகாராணா இரண்டாம் உதய் சிங் ஆவார். இந்த ஏரிக்கு நடுவில் ஜாக் நிவாஸ் & ஜாக் மந்திர் என்ற 2 தீவுகள் உள்ளன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=உதய்பூர்&oldid=289322" இலிருந்து மீள்விக்கப்பட்டது