ஒரோஸ்
ஒரோஸ் (Oros), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் பேரூராட்சி ஆகும். இந்நகரம் மும்பைக்கு தெற்கே 462.3 கிலோ மீட்டர் தொலைவிலும்; கோவாவுக்கு வடக்கே 135.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்நகரம் கொங்கண் பிரதேசத்தில் உள்ளது. இந்நகரத்தில் மராத்திய மொழியுடன் வட்டார மொழியான கொங்கணி மொழியும் பேசப்படுகிறது.
ஒரோஸ் சிந்துதுர்க்நகரி[1] | |
|---|---|
மாவட்டத் தலைமையிடம் பேரூராட்சி | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சிந்துதுர்க் மாவட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 5,311 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 416812 |
| தொலைபேசி குறியீடு | 02362 |
| வாகனப் பதிவு | MH-07 |
| எழுத்தறிவு | 99% |
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1352 குடியிருப்புகள் கொண்ட ஓரொஸ் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 5311 ஆகும். அதில் 2685 ஆண்கள் மற்றும் 2626 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.32% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.13% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 669 மற்றும் 161 வீதம் உள்ளனர்.[2]
போக்குவரத்து
சாலைகள்
கொச்சி-மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 17 ஒரோஸ் நகரம் வழியாகச் செல்கிறது.
இருப்புப்பாதை
ஒரோஸ் அருகே 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த சிந்துதுர்க் தொடருந்து நிலையம்[3], கொங்கண் இரயில்வே மூலம் ஒரோஸ் நகரத்தை கொச்சி, கோவா, கார்வார், மங்களூர், மும்பை மற்றும் தானே நகரங்களுடன் இணைக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ "District Profile". Retrieved 12 January 2021.
- ↑ "Oras Bk. Village Population - Kudal - Sindhudurg, Maharashtra". www.census2011.co.in. Retrieved 2025-04-25.
- ↑ "Sindhudurg railway station", Wikipedia (in ஆங்கிலம்), 2024-07-29, retrieved 2025-04-25