காட்பாடி

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 13:28, 22 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


காட்பாடி (ஆங்கிலம்:Katpadi), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாநகராட்சியின் வடக்கு பகுதி ஆகும். காட்பாடி அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]

வடக்கு வேலூர்
—  வேலூர் மாநகர பகுதி  —
வடக்கு வேலூர்
அமைவிடம்: வடக்கு வேலூர், வேலூர்
ஆள்கூறு 12°58′24″N 79°08′13″E / 12.973400°N 79.136900°E / 12.973400; 79.136900
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.vellore.tn.nic.in
வேலூர் காட்பாடி ரயில் நிலையம்

வேலூர் மாநகராட்சியின் முக்கிய பகுதி காட்பாடி ஆகும். இங்கு தான் வேலூர் காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் வேலூர் தொழிற்நுட்ப கல்லூரி உள்ளது. காட்பாடி நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

வேலூர் மாநகராட்சியுடன் இணைத்தல்

காட்பாடி பேரூராட்சியை வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இது வேலூர் நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. காட்பாடியின் விரிவாக்கப் பகுதியில் காந்தி நகர் உள்ளது.

மேலும் இங்கு வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இவ்வூரில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

இங்குள்ள காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம், சென்னை - பெங்களூரு, வேலூர் - திருப்பதி மற்றும் வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் செல்லும் இருப்புப் பாதைகள் சந்திக்கும் இடமாக உள்ளது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°59′N 79°08′E / 12.98°N 79.13°E / 12.98; 79.13 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 224 மீட்டர் (734 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "அரக்கோணம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225442-arakonam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 22 August 2025. 
  5. "Katpadi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=காட்பாடி&oldid=322251" இலிருந்து மீள்விக்கப்பட்டது