காமா
காமா (Gamma, கிரேக்கம்: γάμμα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் மூன்றாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது மூன்று என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான கிமெலிலிருந்தே () காமா பெறப்பட்டது. காமாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்துகள் C, G, சிரில்லிய எழுத்துகள் Г, Ґ என்பனவாகும்.
| கிரேக்க நெடுங்கணக்கு | |||
|---|---|---|---|
| Αα | அல்ஃபா | Νν | நியூ |
| Ββ | பீற்றா | Ξξ | இக்சய் |
| Γγ | காமா | Οο | ஒமிக்ரோன் |
| Δδ | தெலுத்தா | Ππ | பை |
| Εε | எச்சைலன் | Ρρ | உரோ |
| Ζζ | சீற்றா | Σσς | சிகுமா |
| Ηη | ஈற்றா | Ττ | உட்டோ |
| Θθ | தீற்றா | Υυ | உப்சிலோன் |
| Ιι | அயோற்றா | Φφ | வை |
| Κκ | காப்பா | Χχ | கை |
| Λλ | இலமிடா | Ψψ | இப்சை |
| Μμ | மியூ | Ωω | ஒமேகா |
| அநாதையாய் | |||
| Ϝϝ | டிகாமா | Ϟϟ | கோப்பா |
| Ϛϛ | சிடீகுமா | Ϡϡ | சாம்பை |
| Ͱͱ | ஹஈற்றா | Ϸϸ | உஷோ |
| Ϻϻ | சான் | ||
பயன்பாடுகள்
அறிவியல்
அணுக்கருவியலில் காமாக் கதிரைக் குறிப்பதற்குச் சிற்றெழுத்துக் காமா பயன்படுத்தப்படுகின்றது.
வானியல்
காமாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[3]
தொழினுட்பக் குறிப்புகள்
மீப்பாடக் குறிமொழி
மீப்பாடக் குறிமொழியில் பேரெழுத்துக் காமா, சிற்றெழுத்துக் காமா என்பனவற்றை முறையே Γ, γ என்பன குறிக்கும்.[4]
ஒருங்குறி
| விளக்கம் | வரியுரு | ஒருங்குறி | மீப்பாடக் குறிமொழி |
|---|---|---|---|
| இலத்தீன் | |||
| காமா எழுத்து | Ɣ ɣ |
U+0194 U+0263 |
Ɣ ɣ |
| கிரேக்கம் | |||
| காமா எழுத்து | Γ γ |
U+0393 U+03B3 |
Γ γ |
| காப்டியம் | |||
| காமா எழுத்து | Ⲅ ⲅ |
U+2C84 U+2C85 |
Ⲅ ⲅ |