குடவர்

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 15:45, 26 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சங்ககாலச் சேரநாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது குடநாடு.

படிமம்:Kerala locator map.svg
குடபுலம் (தற்கால கேரளம்)

'குடபுலம்' என்பது சேரநாடு.

குடதிசை என்பது மேற்குத் திசையைக் குறிக்கும் தமிழ்ச்சொல். சேர நாட்டைக் 'குடபுலம்' என்பர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குடநாட்டை வென்று அதன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள்.

கரிகாலனின் வெற்றிகளைக் கண்டு குடவர்-மக்கள் சோர்ந்து கூம்பிப்போயினராம். [1]

குடவர்-மக்கள் வேங்கட அரசன் புல்லி நாட்டிலும் வாழ்ந்தனர். அவர்கள் பொங்கல் சோறும், ஆவின் பாலும் தந்து விருந்தினர்களைப் பேணும் பழக்கமுடையவர். [2]

சேரன் செங்குட்டுவன், [3] ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், [4] சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை [5] ஆகியோர் ’குடவர் கோ’, அல்லது ‘குடவர் கோமான்’ எனப் போற்றப்படிகின்றனர்.

குன்றத்தில் குரவையாடும் சேரநாட்டு மகளிர் ‘வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோ’வை ஆட்டத்தை முடிக்கும்போது பொதுப்பட வாழ்த்துகின்றனர். [6]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. பட்டினப்பாலை 276
  2. அகநானூறு 393-16
  3. சிலப்பதிகாரம் 27-64, 227,
  4. பதிற்றுப்பத்து 55-9 பதிகம் 5-2,
  5. புறநானூறு 17-40
  6. சிலப்பதிகாரம் 24-19-34,
"https://tamilar.wiki/w/index.php?title=குடவர்&oldid=332153" இலிருந்து மீள்விக்கப்பட்டது