கும்ரான்

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 08:15, 25 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கும்ரான் (Qumran, எபிரேயம்: קומראן‎; அரபி: خربة قمران Khirbet Qumran) என்பது மேற்குக் கரையில் அமைந்துள்ள ஓர் தொல்பொருளியற் களம். இது இசுரேலிய குடியிருப்புப் பகுதி, கிப்புட்சு ஆகியவற்றுக்கு அருகில், சாக்கடலின் வடமேற்கு கரையிலிருந்து ஒரு மைல் தொலைவில் வறண்ட பீடபூமி மீது அமைந்துள்ளது. கெலேனிய கால குடியிருப்பு ஜோன் கைக்கானூசு ஆட்சிக்காலத்தில் கி.மு 134-104 க்கு இடைப்பட்ட அல்லது பிற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டு, கி.பி 68 அல்லது அதன் பின்னர் உரோமைப் பேரரசால் அழிக்கப்படும் வரை குடியிருப்பாக இருந்தது. சாக்கடல் சுருள் ஏடுகள் மறைத்து வைக்கப்பட்ட, நேரான பாலைவன செங்குத்துப் பாறைகள், தாழ்வுப் பகுதிகள் சுண்ணாம்புக்கல் பாறை மேல் தளம் கொண்ட கும்ரான் குகைகளுக்கு அண்மித்த குடியிருப்புக்கள் நன்றாக அறியப்பட்டவை.

கும்ரான்
Qumran
קומראן
خربة قمران
படிமம்:Kumeran4.jpg
கும்ரான் குகைகள்
இருப்பிடம்மேற்குக் கரை
பகுதியூதேயா
ஆயத்தொலைகள்31°44′27″N 35°27′31″E / 31.74083°N 35.45861°E / 31.74083; 35.45861
வகைகுடியிருப்பு
வரலாறு
கட்டப்பட்டதுகி.மு 134-104 க்கு இடைப்பட்ட அல்லது பிற்பட்ட காலம்
பயனற்றுப்போனதுகி.பி 68 அல்லது அதன் பின்னர்
காலம்கெலேனிய காலம் முதல் உரோமைப் பேரரசு வரை

இதனையும் காண்க

வெளி இணைப்பு

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=கும்ரான்&oldid=333783" இலிருந்து மீள்விக்கப்பட்டது