தம்மனூர்

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 02:01, 25 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தம்மனூர் (Thammanur) என்பது இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாசாபாத்து நகரிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. தம்மனூர் கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 2500 ஆகும். இது வாலாசாபாத்திலிருந்து இளையனார் வேலுருக்கு (முருகன் கோவிலுக்கு பெயர் பெற்றது) செல்லும் வழியில் அமைந்துள்ளது. கிராமத்தில் ஒரு பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.[2] 12 மற்றும் 13 ஆம் நுற்றாண்டு காலத்தில் பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட ஒரு பழங்கால சிவன் கோவில் ஒன்றும் (ஏகாம்பரேசுவரர்) இங்குள்ளது. இக் கோவிலானது பசுமையான, நெல் மற்றும் கரும்பு வயல்களால் சுழப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தின் 526 வீடுகளில் 2116 வசித்தனர்.[3]

தம்மனூர்
கிராமம்
தம்மனூர் is located in தமிழ்நாடு
தம்மனூர்
தம்மனூர்
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைவிடம்
தம்மனூர் is located in இந்தியா
தம்மனூர்
தம்மனூர்
தம்மனூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°45′46″N 79°48′47″E / 12.76278°N 79.81306°E / 12.76278; 79.81306
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
தாலுகா]]வாலாசாபாத்து
மொழிகள்
 • அலுவலகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

மேற்கோள்கள்

  1. "வாலாஜாபாத் - அவளூர் சாலையில் - போக்குவரத்து துண்டிப்பால் : 10 கிராம மக்கள் அவதி :". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/todays-paper/regional02/740006-.html. பார்த்த நாள்: 25 October 2025. 
  2. <span%2520class="HIGHlight">SCHOOLS "Kancheepuram Panchayat Union Middle School students at Thammanur village near Walajabad, being trained in computer... | The Hindu Images". thehinduimages.com. Retrieved 2025-10-25.
  3. "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". Census of India Website. Retrieved 2021-05-03.
"https://tamilar.wiki/w/index.php?title=தம்மனூர்&oldid=390669" இலிருந்து மீள்விக்கப்பட்டது