நாகபுரம்

imported>JayarathinaAWB BOT பயனரால் செய்யப்பட்ட 09:50, 25 சூலை 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நாகபுரம் என்பது ஓர் ஊர்.

புகார் நகரத்து அரசி, சித்திராபதி, அவளது ஆயம், மணிமேகலை ஆகியோர் அறவண அடிகளிடம் நல்லறம் கேட்டனர்.
பின்னர் மணிமேகலை புத்தத் துறவிக் கோலத்தில் அந்தரம் வழியாகப் பறந்து சென்றாள்.
வழியில் ஓர் ஊரின் பொழிலில் இறங்கி இளைப்பாறினாள்.
அங்கு மாதவ முனிவனை வணங்கி அந்த ஊரைப் பற்றி வினவினாள்.
மாதவ முனிவன் அந்த ஊரைப்பற்றிச் சொன்னான்.

இந்திரன் கால்வழியினர் (மருமான்) இந்த ஊரை ஆள்கின்றனர்.
இந்த ஊரின் பெயர் நாகபுரம்.
இப்போது ஆள்பவன் பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் (ஆபுத்திரன்).
இவன் பிறந்த நாளிலிலிருந்து இவ்வூரில் மழைவளம் பொய்த்ததில்லை. மக்கள் நோயின்றி வாழ்கின்றனர் – என மாதவன் கூறினான்.[1]

அடிக்குறிப்பு

  1. மணிமேகலை - 24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
"https://tamilar.wiki/w/index.php?title=நாகபுரம்&oldid=412672" இலிருந்து மீள்விக்கப்பட்டது