பதூம்

imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 07:43, 10 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பதூம் அல்லது பதம் (Padum Or Padam) இந்தியாவின் வடக்கில் உள்ள லடாக் ஒன்றிய பகுதியின் கார்கில் மாவட்டத்தின் சன்ஸ்கார் வருவாய் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இவ்வூர் சன்ஸ்கார் மலைத்தொடரில் 3669 மீட்டர் உயரத்தில் உள்ளது. திபெத்திய பௌத்த மதகுருவான பத்மசாம்பவர் பெயரில் இந்த ஊருக்கு பதூம் அல்லது பதம் எனப்பெயரிட்டனர். இது கார்கில் நகரத்திற்கு தென்கிழக்கே 230.7 கிலோ மீட்டர் தொலைவிலு; லே நகரத்திற்கு தென்மேற்கே 445.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பதூம் நகரத்திலிருந்து லே செல்ல கார்கில் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டும். தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் தார்ச்சாவிலிருந்து நேரடியாக லே நகரத்திற்கு செல்ல சாலை நிறுவப்பட்டு வருகிறது.

பதும்
பதம்
பதும் நகரக் காட்சி
பதும் நகரக் காட்சி
பதும் is located in லடாக்
பதும்
பதும்
இந்தியாவின் லடாக்கில் பதும் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°27′50″N 76°52′43″E / 33.46389°N 76.87861°E / 33.46389; 76.87861
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்கார்கில் மாவட்டம்
வட்டம்சன்ஸ்கார்
அரசு
 • வகைமாவட்ட தன்னாட்சி நிர்வாகக் குழு
 • நிர்வாகம்கார்கில் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு
ஏற்றம்
3,669 m (12,037 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,550
மொழிகள்
 • அலுவல் மொழிள்லடாக்கிய மொழி, திபெத்திய மொழி, இந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
194302
வாகனப் பதிவுLA 01 XXXX
இணையதளம்http://www.kargil.nic.in/

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 261 குடும்பங்கள் கொண்ட பதூம் ஊரின் மக்கள் தொகை 1,538 ஆகும். அதில் ஆண்கள் 808 மற்றும் பெண்கள் 730 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.72% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து

இமாச்சலப் பிரதேசத்திலிருந்து லே நகரம் செல்ல கார்கில் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயண நேரத்தைக் குறைக்க புதிதாக லே மாவட்டததின் நிம்குவிலிருந்து, இமாச்சலப் பிரதேசத்தின் லாகௌள்-ஸ்பீதி மாவட்டத்தின் தார்ச்சா வரை புதிய சாலை நிறுவப்படுகிறது.[2]இச்சாலைப் பணி 2023ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பதூம்&oldid=425515" இலிருந்து மீள்விக்கப்பட்டது