பானு
பானு அல்லது சைலேந்திர பானு (இந்தோனேசியம்: Bhanu; ஜாவானியம்: Bhanu) என்பவர் மத்திய ஜாவாவில், மாதரம் இராச்சியம், சைலேந்திர வம்சத்தின் நிறுவனர் மற்றும் சைலேந்திர வம்சத்தின் முதல் மன்னரும் ஆவார்.[1]:92
| பானு Bhanu Raja Bhanu | |||||
|---|---|---|---|---|---|
| மாதரம் அரசர் | |||||
| ஆட்சிக்காலம் | 752—775 | ||||
| முன்னையவர் | ? | ||||
| பின்னையவர் | தருமசேது (Maharaja Wisnu) | ||||
| |||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இவரின் ஆட்சிக்காலம் 752 – 775 என்று சில சான்றுகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், இந்தக் கால அளவின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்த வேண்டிய இலக்கில் உள்ளது.
வரலாறு
சூலை 24, 750 அன்று, மத்திய ஜாவா,திரிகிராம்வியாமா (Trigramwyama), அம்பரான் கிராமத்தில் இலவச நிலத்தை நன்கொடையாக வழங்கிய தலைவர் பானு என்று பிளம்பூங்கான் கல்வெட்டில் (Plumpungan Inscription)[2] காணப்படுகிறது.
இந்த நன்கொடை, சங்க சீதாதேவி (Sang Siddhadewi) ஒப்புதலின் பேரில், சங்க ஈசா (Sang Isa) தெய்வத்தின் மீதான பக்திக்காக வழங்கப்பட்டது என்றும் கல்வெட்டின் பதிவில் உள்ளது. பிளம்பூங்கான் கல்வெட்டு சலதிகா (Salatiga) பிளம்பூங்கான் கிராமத்தில் 1900-ஆம் ஆண்டுகளில் கண்டெடுக்கப்பட்டது.
பிளம்பூங்கான் கல்வெட்டு மன்னர் பானுவால் வெளியிடப்பட்டது. இதுவரை கண்டெடுக்கப்பட்ட பழைய ஜாவானிய எழுத்துகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளில், மிகப் பழமையான கல்வெட்டாக பிளம்பூங்கான் கல்வெட்டு அறியப்படுகிறது.
மேலும் காண்க
மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்
மேற்கோள்கள்
- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
- ↑ "Mantyasih Inscription editorial photo. Image of prasasti - 150425806". Dreamstime (in ஆங்கிலம்). Retrieved 27 January 2025.
சான்றுகள்
- Poesponegoro & Notosusanto. 1990. Sejarah Nasional Indonesia Jilid II. Jakarta: Balai Pustaka
- Purwadi. 2007. Sejarah Raja-Raja Jawa. Yogyakarta: Media Ilmu
- Slamet Muljana. 2006. Sriwijaya (terbitan ulang 1960). Yogyakarta: LKIS