பேங்கேதி

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 09:45, 3 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பேங்கேதி (Bankhedi) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதாபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகரமும் நகரப் பஞ்சாயத்துமாகும். தாலுக்கா தலைமையகமாக பேங்கேதி நகரம் செயல்படுகிறது.[1]

பேங்கேதி
Bankhedi
நகரம்
பேங்கேதி Bankhedi is located in மத்தியப் பிரதேசம்
பேங்கேதி Bankhedi
பேங்கேதி
Bankhedi
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°46′N 78°32′E / 22.76°N 78.53°E / 22.76; 78.53
நாடுசிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்நர்மதாபுரம் மாவட்டம்
அரசு
 • வகைநகரப் பஞ்சாயத்து
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்13,667
மொழிகள்
 • அலுவல்இந்தி
அஞ்சல் குறியீட்டு எண்
466221
வாகனப் பதிவுஎம்பி 37

புவியியல்

பேங்கேதி நகரம் கடல் மட்டத்திலிருந்து 323 மீ (1,060 அடி) உயரத்தில் 22.76 வ 78.53 கி என்ற புவியியல் கூறுகளில் அமைந்துள்ளது.[2] சத்புரா மலைத்தொடர்கள் மற்றும் நர்மதா படுகைப் பகுதியில் பேங்கேதி நகரம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பேங்கேதி நகரத்தின் மக்கள் தொகை 13667 ஆகும். இதில் 7,084 ஆண்களும் 6583 பெண்களும் இருந்தனர். மொத்தமாக அப்போது இந்நகரத்தில் 2922 குடும்பத்தினர் வசித்தனர்.[3]

பொருளாதாரம்

பேங்கேதி பகுதியினர் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்து உள்ளனர். இதன் மக்கள் விவசாயம் மற்றும் வணிகத்தையே நம்பியுள்ளனர். முக்கிய பயிர்கள் கோதுமை, மக்காச்சோளம் மற்றும் சோயாபீன்சு ஆகியவை ஆகும்.

நிர்வாகம்

பேங்கேதி 15 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.[4]

பேங்கேதி நகர் பஞ்சாயத்து மொத்தம் 2,922 வீடுகளுக்கு மேல் நிர்வாகத்தைக் கொண்டுள்ளது. இந்நிர்வாகம் தண்ணீர் மற்றும் கழிவுநீர் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குகிறது. நகர் பஞ்சாயத்து எல்லைக்குள் சாலைகள் அமைக்கவும், அதன் அதிகார வரம்பிற்குள் வரும் சொத்துக்களுக்கு வரி விதிக்கவும் இவ்வமைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[5]

போக்குவரத்து

பேங்கேதி இரயில் நிலையம் இடார்சி-இயபல்பூர் இரயில் பாதையில் உள்ளது. இயபல்பூர் இரயில்வே பிரிவின் கீழ் இந்நிலையம் இயங்குகிறது.

மேற்கோள்கள்

  1. "तहसील | District Narmadapuram, Government of Madhyapradesh | India".
  2. "Maps, Weather, and Airports for Bankheri, India". www.fallingrain.com.
  3. "Bankhedi Village Population - Bankhedi - Hoshangabad, Madhya Pradesh". www.census2011.co.in.
  4. "पुलिस | District Narmadapuram, Government of Madhyapradesh | India".
  5. "नगरीय प्रशासन एवं विकास | District Narmadapuram, Government of Madhyapradesh | India".

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பேங்கேதி&oldid=450180" இலிருந்து மீள்விக்கப்பட்டது