பேய்லைட்டு

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 16:29, 6 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பேய்லைட்டு (Bayleyite) என்பது Mg2(UO2)(CO3)3·18(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். யுரேனியம் கார்பனேட்டு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. பேய்லைட்டு கனிமம் மக்னீசியம், யுரேனியம் மற்றும் கார்பன் ஆகிய தனிமங்களைக் கொண்ட இரண்டாம் நிலை கனிமமாகும். பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இது காணப்படுகிறது. இதன் படிகப் பழக்கம் ஊசிவடிவமாகும். ஆனால் இது பொதுவாக யுரேனியம் தாங்கும் தாதுக்களின் மேலோடுகளாகக் காணப்படுகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் சுமார் 2–2.5 என்ற கடினத்தன்மையைக் பேய்லைட்டு கனிமம் கொண்டுள்ளது.[1]

பேய்லைட்டு
Bayleyite
நியூமெக்சிகோவின் அம்புரோசியா ஏரியில் கிடைத்த பேய்லைட்டு கனிம மாதிரி (அளவு: 4.6 × 2.4 × 1.6 cm)
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுMg2(UO2)(CO3)3·18(H2O)
இனங்காணல்
நிறம்கந்தக மஞ்சள்
படிக இயல்புபட்டகப் படிகங்களின் கொத்துகள், மேலோடுகள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை2–2.5
மிளிர்வுபளபளக்கும்
ஒளிஊடுருவும் தன்மைஅரை ஒளி ஊடுருவும்
ஒப்படர்த்தி2.05
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.453 – 1.455 nβ = 1.490 – 1.492 nγ = 1.498 – 1.502
இரட்டை ஒளிவிலகல்δ = 0.045 – 0.047
பலதிசை வண்ணப்படிகமைபுலப்படும்: X = இளஞ்சிவப்பு, Y = இளம் மஞ்சள், Z = இளம் மஞ்சள்
2V கோணம்அளக்கப்பட்டது: 30°
புறவூதா ஒளிர்தல்பலவீனம்; மஞ்சள்-பச்சை முதல் வெளிர் பச்சை வரை
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் பேய்லைட்டு கனிமத்தை Byy[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

தோற்றம்

முதன்முதலில் பேய்லைட்டு கனிமம் 1948 ஆம் ஆண்டு அரிசோனாவின் யாவாபாய் மாகாணத்தில் உள்ள பாக்தாத்தின் வடக்கே உள்ள இல்சைடு சுரங்கத்தில் கிடைத்ததாக விவரிக்கப்பட்டது. மேலும் இல்லினாய்சு பல்கலைக்கழகத்தின் கனிமவியலாளர் வில்லியம் செர்லி பேய்லி (1861–1943) என்பவரின் நினைவாக பேய்லைட்டு எனப் பெயரிடப்பட்டது. மற்ற இரண்டாம் நிலை கனிமங்களில் ஒரு மலர்ச்சி அல்லது பூச்சாக இது தோன்றுகிறது. பெரும்பாலும் சுரங்கச் சுவர்கள் மற்றும் வேலைப்பாடுகளில் படிந்து காணப்படுகிறது. இல்சைடு சுரங்கத்தில் சுரோக்கிங்கரைட்டு, ஆண்டர்சோணைட்டு, சிவார்ட்சைட்டு மற்றும் ஜிப்சம் ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. உட்டாவில் உள்ள ஐட்வுட்டு சுரங்கத்தில் சுரோக்கிங்கரைட்டு மற்றும் ஜிப்சம் ஆகியவற்றுடன் கிடைக்கிறது. வயோமிங்கில் உள்ள நதிப் படுகையில் தியுயாமுனைட்டு, யுரேனோஃபேன், இலிபிகைட்டு மற்றும் கார்னோடைட்டு ஆகியவற்றுடன் சேர்ந்து காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Bayleyite on Mindat.org
  2. Bayleyite on Webmineral
  3. 3.0 3.1 Handbook of Mineralogy
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://tamilar.wiki/w/index.php?title=பேய்லைட்டு&oldid=450559" இலிருந்து மீள்விக்கப்பட்டது