ரோசனம்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 14:44, 8 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: பயன்படுத்துகிறார்கள் → பயன்படுத்துகின்றனர் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ரோசனம் (Rosin) என்பது ஒரு வகை பிசின். இது எளிதில் நொறுங்கக் கூடிய திண்மப் பொருள். ஆம்பர் நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரையில் உண்டு. பென்சீன், ஈதர், ஆல்கஹால் போன்ற கரிம நீர்மங்களில் கரையும். நீண்ட இலைகளுள்ள பைன் மரத்திலிருந்து கிடைக்கும் பின்னரக்கு (Oleoresin) கலவைப்பொருளை வாலைவடித்துக் கிடைக்கப் பெறுகிறது. வாலைவடிக்கும்போது நீராவியுடன் வெளிவருவது டர்ப்பன்டைன் (Turpentine) தைலம். தைலம் முழுவதும் வடிந்தபின் எஞ்சி நிற்கும் திடப்பொருள் ரோசனம் எனப்படும். இதை மெருகூட்டிகள் (Polishes), வர்ணம் முதலியவைகளின் உற்பத்தியில் பயன்படுத்துகின்றனர். காகிதத்திற்குப் பசை பபோடவும் (Sizing), வயலின் இசைக்கருவியை மீட்டும் வில்லில் பூசவும், வழுக்கிவிடக்கூடிய பரப்பை வழுக்காமலிருக்குமாறு செய்யப் பூசவும் ரோசனம் பயன்படுகின்றது. [1]

ரோசனம் (Rosin)
"https://tamilar.wiki/w/index.php?title=ரோசனம்&oldid=485923" இலிருந்து மீள்விக்கப்பட்டது