லாரைட்டு
லாரைட்டு (Laurite) என்பது RuS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கருப்பு நிறத்தில் ஒளிபுகாத உலோக ருத்தேனியம் சல்பைடு கனிமமாக சம அளவு படிகங்களாக இது உருவாகிறது. பைரைட்டு கட்டமைப்பு குழுவில் இது இடம்பெற்றுள்ளது. லாரைட்டு கனிமம் உலகளவில் பல இடங்களில் காணப்பட்டாலும், இது மிகவும் அரிதானது.
| லாரைட்டு Laurite | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | சல்பைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | RuS2 |
| இனங்காணல் | |
| நிறம் | இரும்பு கருப்பு; வெள்ளை முதல் சாம்பல் அல்லது நீல நிறம் |
| படிக இயல்பு | எண் முகமாக , கனசதுரம், மற்றும் படிகங்கள் அல்லது வட்டமான தானியங்கள் மற்றும் சேர்த்தல்களாக |
| படிக அமைப்பு | கனசதுரம் |
| பிளப்பு | {111} இல் சரிபிளவு |
| முறிவு | துணைசங்குருவம் |
| விகுவுத் தன்மை | நொறுங்கும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 7.5 |
| மிளிர்வு | உலோகத்தன்மை |
| கீற்றுவண்ணம் | அடர் சாம்பல் |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
| ஒப்படர்த்தி | 6.43 |
| அடர்த்தி | 6.43 கி/cm3 (கணக்கப்பட்டது) 6.39 கி/cm3 (அளவிடப்பட்டது) |
| ஒளியியல் பண்புகள் | ஒளிபுகாது மற்றும் ஒருபடித்தானது |
| மேற்கோள்கள் | [1]வார்ப்புரு:Mindat</ref>[2] |
மோவின் கடினத்தன்மை அளவு கோலில் லாரைட்டு கனிமத்தின் மதிப்பு 7.5 எனவும் இதன் ஒப்படர்த்தி அளவு 6.43 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ருத்தேனியத்திற்குப் பதிலாக ஓசுமியம், ரோடியம், இரிடியம், இரும்பு ஆகியவையும் இதனுடன் சேர்ந்திருக்கும். கந்தகம் டைசல்பைட் அயனியாக S2−2 அயனியாக இதில் இடம்பெற்றுள்ளது. எனவே ருத்தேனியம் Ru(II) என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.[3]
தோற்றம்
லாரைட்டு கனிமம் 1866 ஆம் ஆண்டு மலேசியாவின் போர்னியோவில் கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்க வேதியியலாளர் சார்லசு ஏ. ஜாயின் மனைவி லாரியின் பெயரிடப்பட்டது. ஒருவகையான தீப்பாறைகள் குவிந்த படிவுகளிலும் அவற்றிலிருந்து பெறப்பட்ட வண்டல் படிவுகளிலும் காணப்படுகிறது. கூடுப்பரைட்டு, பிராகைட்டு, சிபெர்ரைலைட்டு, பிளாட்டினம் குழு தனிமங்களின் பிற கனிமங்கள் மற்றும் குரோமைட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது.
செயற்கை RuS2 என்பது ஹைட்ரோசல்பரைசேஷனுக்கான மிகவும் செயலில் உள்ள வினையூக்கியாகும்.
மேற்கோள்கள்
- ↑ Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W.; Nichols, Monte C. (2005). "Laurite" (PDF). Handbook of Mineralogy. Mineral Data Publishing. Retrieved 14 March 2022.
- ↑ "Laurite Mineral Data". Webmineral.com.
- ↑ Cocco, R.A.; Tatarchuk, B.J. (1989). "Effects of presulfidization on the selectivity and surface structure of ruthenium catalysts". Langmuir 5 (6): 1309–1315. doi:10.1021/la00090a005. https://pubs.acs.org/doi/pdf/10.1021/la00090a005. பார்த்த நாள்: 20 June 2022.