அசூர் மக்கள்
அசூர் மக்கள் (Asur people), இந்தியாவின் ஜார்கண்ட் மற்றும் பிகார் மாநிலங்களில் வாழும் ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் கிளை மொழிகளான அசூர் மொழி மற்றும் பிரிஜியா மொழிகளைப் பேசும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டம் மற்றும் லாத்தேஹார் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| c. 33,000 (2011 கணக்கெடுப்பு) | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| ஜார்கண்ட் | 28,735[1] |
| பிகார் | 4,987 |
| மொழி(கள்) | |
| அசூர் மொழி, பிரிஜியா மொழி | |
| சமயங்கள் | |
| மரபுவழி நம்பிக்கைகள் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| முண்டா மக்கள் | |
முன்னர் வேட்டைத் தொழில் செய்த அசூர் பழங்குடி மக்கள் பின்னர் இரும்பு உருக்கும் தொழில்[2] மற்றும் வேளாண்மைத் பரம்பரைத் தொழிலாக கொண்டுள்ளனர்.
அசூர் பழங்குடி மக்கள் இயற்கையையும், முன்னோர் வழிபாட்டையும் கொண்டுள்ளனர். மாந்திரிகத்தில் நம்பிக்கைக் கொண்டு, துர் தேவதைகளை வழிபடுகின்றனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". Census of India 2011. Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 2017-03-24.
- ↑ Sarit Kumar Chaudhuri; Sucheta Sen Chaudhuri (2005). Primitive Tribes in Contemporary India: Concept, Ethnography and Demography, Volume 1. Mittal Publications. ISBN 8183240267. Retrieved 2013-06-13.