அப்பி மலை
அப்பி மலை (மலாய் மொழி: Gunung Api; ஆங்கிலம்: Mount Api) என்பது மலேசியா, சரவாக், மிரி பிரிவு, மாருடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். இந்த மலை முலு மலை தேசியப் பூங்கா எல்லைக்குள் அமைந்துள்ளதால், இந்த மலைக்கு ஏடன் தோட்டம் (Garden of Eden) எனவும் பெயரிடப்பட்டது.
| அப்பி மலை Mount Api Gunung Api | |
|---|---|
| படிமம்:Mulu Pinnacles.jpg அப்பி மலை சுண்ணாம்புக் கோபுரங்கள் | |
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 1,750 m (5,740 அடி) |
| ஆள்கூறு | 04°06′07″N 114°53′35″E / 4.10194°N 114.89306°E |
| புவியியல் | |
| அமைவிடம் | மிரி பிரிவு, மாருடி மாவட்டம் |
அப்பி மலை அதன் தாவரக் குடுவைகளின் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. அப்பி மலையில் ஐந்து வகையான தாவரக் குடுவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1]
பல்லுயிர்கள்
அப்பி மலையின் சுண்ணாம்புக் கற்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மலைச் சிகரங்கள் பல தனித்துவமான தாவரங்களைக் கொண்டுள்ளன. அத்துடன் அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தாயகமாகவும் விளங்குகிறது.[1]
அப்பி மலையானது தாழ்நிலக் காட்டுத் தாவரங்களில் (Dipterocarpaceae) இருந்து மலைத்தொடர் தாவரங்கள் (Montane Vegetations) வரையிலான உயிரியல் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
பொது
முலு மலை தேசியப் பூங்காவில் மூன்று மலைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன: முலு மலை (2,376 மீ - 7,795 அடி)]; அப்பி மலை (1,750 மீ - 5,740 அடி) மற்றும் பெனாரத் மலை (1,858 மீ - 6,096 அடி).
முலு மலை ஒரு மணற்கல் மலை; அப்பி மலை மற்றும் பெனாரத் மலை ஆகியவை சுண்ணாம்பு மலைகள். முலு மலையின் உச்சி பாசி காடுகளால் மூடப்பட்டுள்ளது; அதே சமயத்தில் அபி மலையின் உச்சியில் சுண்ணாம்புக் கற்கள் காணப்படுகின்றன.[2]
நிலவியல்
அப்பி மலை பொதுவாகவே, கரடுமுரடான சிகரங்கள், செங்குத்தான முகடுகள், மலைப் பாதைகள், பாறைகள், அகன்ற பள்ளத்தாக்குகள், சுண்ணாம்புக் கரடுகளைக் கொண்ட பாறைக் கோபுரங்கள், குகைகள், வெந்நீர் ஊற்றுகள், வெள்ளப்பெருக்குச் சமவெளிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
குகைகள்
- சரவாக் நிலவறை - உலகின் மிகப்பெரிய நிலத்தடி அறைகளில் ஒன்றாகும்; 600 மீ (2,000 அடி) நீளம், 415 மீ (1,362 அடி) அகலம்; குறைந்த பட்ச உயரம் 80 மீ (260 அடி)
- மான் குகை - உலகின் மிகப்பெரிய குகைப் பாதை; 120 மீ (390 அடி) முதல் 150 மீ (490 அடி) வரையிலான சுற்றளவு[3]
- கிளியர்வாட்டர் குகை - தென்கிழக்கு ஆசியாவின் மிக நீளமான குகை; 227.2 கிமீ வரையிலான நீளத்தைக் கொண்டது[4][5][6]
காட்சியகம்
-
கிளியர்வாட்டர் குகையின் நீரூற்று
-
முலு பூங்கா சுண்ணாம்பு மலை
-
அழகிய முலு பூங்கா
-
கிளியர்வாட்டர் குகையின் உட்பாகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Bourke, G. 2011. The Nepenthes of Mulu National Park. Carniflora Australis 8(1): 20–31.
- ↑ "Gunung Mulu National Park – A UNESCO World Heritage". Sarawak Tourism Board. Archived from the original on 30 June 2017. Retrieved 27 October 2018.
- ↑ "Deer Cave and Lang's Cave". Mulu National Park. Archived from the original on 12 July 2015. Retrieved 27 December 2015.
- ↑ "Clearwater cave and Wind Cave". Gunung Mulu National Park. Archived from the original on 12 July 2015. Retrieved 27 December 2015.
- ↑ "Gunung Mulu National Park". Malaysia Tourism Promotion Board. Archived from the original on 17 October 2015. Retrieved 27 December 2015.
- ↑ "The Clearwater Cave System". The Mulu Caves project. Archived from the original on 29 October 2018. Retrieved 29 October 2018.
மேலும் படிக்க
- National Parks of Sarawak, by Hans P. Hazebroek, Abang Kashim bin Abang Morshidi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-812-032-4.
- The Encyclopedia of Malaysia, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-3018-47-X.
- On the Law Which Has Regulated the Introduction of New Species பரணிடப்பட்டது 2007-04-28 at the வந்தவழி இயந்திரம்.
- AR Wallace travelog to Borneo and the Malay World.