அருகபுரா மலை
அருகபுரா மலை அல்லது இயாங்-அர்காபுரா (ஆங்கிலம்: Mount Argapura; Iyang-Argapura; இந்தோனேசியம்: Gunung Argapura; Gunung Argopuro) என்பது இந்தோனேசியா, ஜாவா தீவு, கிழக்கு ஜாவா இராங் மலை (Mount Raung) மற்றும் இலாமோங்கான் மலை (Mount Lamongan) ஆகிய இரு மலைகளுக்கு இடையேயான நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய எரிமலை வளாகமாகும்.
| அருகபுரா மலை | |
|---|---|
| Mount Iyang-Argapura Gunung Argapura | |
| படிமம்:Iyang-Argapura.jpg இயாங்-அர்காபுரா வளாகம் | |
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 3,088 m (10,131 அடி)[1] |
| புடைப்பு | 2,745 m (9,006 அடி)[2] |
| பட்டியல்கள் | அதி கூர்மைச் சிகரம் ரீபு மலைகள் |
| ஆள்கூறு | 7°58′S 113°34′E / 7.97°S 113.57°E |
| புவியியல் | |
| நிலவியல் | |
| பாறையின் வயது | ஹோலோசீன் |
| மலையின் வகை | பல்வகை எரிமலை சுழல் வடிவ எரிமலை |
3,088 மீட்டர் உயரம் கொண்ட அர்காபுரா மலை ஒரு முன்னாள் எரிமலை; தற்போது செயல்படவில்லை. இயாங் மலைகளில் உள்ள மிக உயரமான இடமாக அருகாபுரா மலையின் சிகரம் உள்ளது. இந்த மலை இயாங் மலைகள் வனவிலங்கு சரணாலயப் பகுதியில் அமைந்துள்ளது.[3] எனவே இந்த வளாகம் பெரும்பாலும் இயாங்-அருகபுரா என்று அழைக்கப்படுகிறது.
1,000 மீட்டர் ஆழம் வரையிலான பள்ளத்தாக்குகள் கடுமையாக இயாங் எரிமலையை அருகபுரா மலையில் இருந்து பிரிக்கின்றன. கடந்த 500 ஆண்டுகளில் எந்த ஒரு வெடிப்பும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் கி.பி. 1597-இல் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாக ஒரு பதிவு உள்ளது.[1]
அமைவு
அர்கோபுரோ மலையில் மரக் காடுகள் (Dipterocarp forest), உயர்நில மரக் காடுகள், மலைச் சூழற்றொகுதிகள் (Montane forest) மற்றும் முட்செடி வகை சார்ந்த காடுகள் அல்லது மலைக் காடுகள் போன்ற பகுதிகள் உள்ளன.
இந்த அருகபுரா மலை; புரோபோலிங்கோ பிராந்தியம், லுமாஜாங் பிராந்தியம், ஜெம்பர் பிராந்தியம், போண்டோவோசோ பிராந்தியம்; சிட்டுபோண்டோ பிராந்தியம் ஆகியவற்றின் குறுக்கே நீண்டுள்ள ஐயாங் மலைகளில் அமைந்துள்ளது.
கடல் தேவதை காஞ்சனா
சுந்தானிய; ஜாவானிய மக்களின் புராணக் கதைகளின்படி, ரெங்கானிய மலைப் பகுதியில் (Puncak Rengganis), நிய் ரோரோ கிடுல் எனும் கடல் தேவதையின் தங்கை இரங்கா தேவி (Dewi Rengganis) வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது.
நிய் ரோரோ கிடுல் (Nyi Roro Kidul; பாலி மொழி: ᬜᬶᬭᭀᬭᭀᬓᬶᬤᬸᬮ᭄; சுண்டா மொழி: ᮑᮤ ᮛᮛ ᮊᮤᮓᮥᮜ᮪)[4] என்பவர் இந்தோனேசிய நாட்டுப்புறக் கதைகளில் இருந்து வந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நபர் ஆவார். இவர் ஜாவானியப் புராணங்களில் கடல் தேவதை காஞ்சனா (Kanjeng Ratu Kidul) என்றும் அழைக்கப்படுகிறார்.[5]
அவர் சுண்டானிய மற்றும் ஜாவானிய புராணங்களில் இந்தியப் பெருங்கடலை ஆட்சி செய்ததாக நம்பப்படுகிறது.[6]
காட்சியகம்
அருகபுரா மலையின் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Iyang-Argapura". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம். Retrieved 2006-12-28.
- ↑ "Ijen". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம்.
- ↑ "Salinan arsip". Archived from the original on 2021-06-24. Retrieved 2017-09-06.
- ↑ Herman Utomo dan Silvie Utomo. 2008. Dialog dengan Alam Dewa. Jakarta: Kelompok Spiritual Universal.
- ↑ "5 Karakter Legenda Nyi Roro Kidul dalam Video Game Dunia". Urbandigital (in இந்தோனேஷியன்). 2018-09-14. Retrieved 2019-08-13.
- ↑ Jordaan, Roy E. Tara and Nyai Lara Kidul - Asian Folklore Studies, Volume 56, 1997: pp 303
வெளி இணைப்புகள்