ஆடுதுறை - 58
ஆடுதுறை - 58 (ADT 58), சுட்டுப்பெயர்: (AD 12132), முன்மொழிவு எண்: (IET 291211)[3] எனப்படும் இந்த நெல் வகை, ஆடுதுறை - 39 மற்றும் Konark நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் கலப்பின நெல் இரகமாகும்.[1] மேலும் இது ஆடுதுறை-39க்கு சிறந்த மாற்று இரகமாக கணறியப்பட்டுள்ளது.[4]
| ஆடுதுறை - 58 ADT 58 |
|---|
| வேளாண் பெயர் |
| ADT 58 (AD 12132), (IET 291211) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஆடுதுறை - 39 X Konark[1] |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 125 - 130 நாட்கள்[2] |
| மகசூல் |
| 6100 கிலோ எக்டேர்[1] |
| வெளியீடு |
| 2023[3] |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
காலம்
நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 125 - 130 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. தாளடி மற்றும் பின் சம்பா, போன்ற பருவங்களில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, தமிழ்நாட்டின் காவிரி கழிமுக மண்டலத்தின் தாளடி பருவத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.[2]
மகசூல்
குலை நோய், செம்புள்ளி, இலைஉறை அழுகல் நோய்கள், இலைமடக்குப்புழு மற்றும் தண்டுத் துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்புத்திறனுள்ள ஆடுதுறை - 58, ஒரு எக்டேருக்கு சராசரியாக 6100 கிலோ உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1] மேலும் ஆயிரம் நெல் மணிகளின் எடை 16.5 கிராம் கொண்ட நடுத்தர சன்ன அரிசியாக உள்ள இது, அரைவைத்திறன் (72%), முழு தானியத் திறன் (65%) ஆகும் என கூறப்பட்டுள்ளது. [4]
வெளியீடு
தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள TRRI நிறுவனத்தால் 2023 ஆம் ஆண்டு ஆடுதுறை - 58 நெல் இரகத்தை நடுவண் விதைக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு இந்திய அரசு இந்த வகையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பங்கஜ் யாதவ் செப்டம்பர் 25, 2023 அன்று வெளியிட்டார் என அறியப்படுகிறது.[3]
சாகுபடி
வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்த நெல் இரகத்தை, 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் விழுப்புரம், கிருசி விஞ்ஞான் கேந்திராவால் ஏற்பாடு செய்யப்பட்ட உழவர்கள், வயலில் புதிய நெல் வகையான ஆடுதுறை - 58 ஐப் பயன்படுத்தி மொத்தம் இருபது கள செயல்விளக்கங்கள் நடத்தப்பட்டன. மேலும் ஆடுதுறை - 39 வகையை பயிரிடும் விவசாயிகள், சோதனை இரகமாக (விவசாயி நடைமுறை) பயன்படுத்தப்பட்டனர். இந்த இரகத்தின் செயல்விளக்கங்களில் சராசரியாக எக்டேர்-1க்கு 6,385 கிலோ மகசூல் பதிவு செய்யப்பட்டது, இது ஆடுதுறை - 39 வகையை (5761kg.ha-1) பயிரிடுபவர்களை விட 10.84% அதிகமாகும் என அறியப்படுகிறது.[5]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Season and Varieties: Rice ADT 58". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-07-03.
- ↑ 2.0 2.1 "Duration and average yield for ADT 57 paddy variety". agri.bot (ஆங்கிலம்) - © January 7, 2024. Retrieved 2025-07-02.
- ↑ 3.0 3.1 3.2 "Rice Variety ADT 58 (AD 12132) (IET 291211)". www.global-agriculture.com (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-07-03.
- ↑ 4.0 4.1 "ஆடுதுறை 39க்கு சிறந்த மாற்று இரகம் - ஆடுதுறை (ADT) 58 நெல் ரகம்". www.csdms.reliancefoundation.org - © 2025. Retrieved 2025-07-03.
- ↑ "On-Farm Demonstration of ADT 58 Rice Variety in Villupuram District". journalijpss.com (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-07-03.