இலக்கணம்
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு ஸம்பூர்ண இராகம் என்றாலும் ஒரு மேளகர்தா இராகம் ஆகாது, ஏனெனில் இதில் வக்ர ஆரோகணம் உள்ளது.
- இது ஒரு பாஷாங்க இராகம். இன்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன. இவை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் வரவில்லை, ஆனால் சில பிரயோகங்களில் வருகின்றன.
உருப்படிகள்
- சியாமா சாஸ்திரிகள் இந்த இராகத்தில் நிறைய உருப்படிகள் இயற்றினார். அவர் இந்த இராகத்தை தற்போதய உருவிற்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
- கொஞ்சநாள் பொறு தலைவா :- ஆசை
- போய்வா மகளே :- கர்ணன்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.
வெளியிணைப்புகள்