ஆப்பக்கூடல்
ஆப்பக்கூடல் (ஆங்கிலம்:Appakudal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், பவானி வட்டம் மற்றும் பவானி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இப்பேரூராட்சி எல்லைக்குள் தனியார் நிறுவனமான சக்தி சர்க்கரை ஆலை அமைந்துள்ளது.
| ஆப்பக்கூடல் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 11°28′34″N 77°34′35″E / 11.476200°N 77.576300°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | பவானி வட்டம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,610 (2011[update]) • 1,426/km2 (3,693/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
7.44 சதுர கிலோமீட்டர்கள் (2.87 sq mi) • 215 மீட்டர்கள் (705 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/appakudal |
அமைவிடம்
ஆப்பக்கூடல் பேரூராட்சியிலிருந்து ஈரோடு 35 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் பவானி 14 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 40 கி.மீ.; வடக்கில் அந்தியூர் 13 கி.மீ.; தெற்கில் கவுந்தப்பாடி 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
7.44 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 54 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,149 வீடுகளும், 10,610 மக்கள்தொகையும் கொண்டது.[5]
தொழில் வளம்
ஆப்பக்கூடலில் சக்தி சர்க்கரை ஆலை உள்ளது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ ஆப்பக்கூடல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Appakudal Population Census 2011