ஆ. மணி
ஆ. மணி (A. Mani) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராவார். மணி 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆ. மணி | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | செ. செந்தில்குமார் |
| தொகுதி | தருமபுரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| பணி | வழக்கறிஞர் |
வாழ்க்கைக் குறிப்பு
மணி தருமபுரி பாரதிபுரத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான இவர் 1987 முதல் திமுக உறுப்பினராக உள்ளார். 2016 முதல் 2019 வரை தருமபுரி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். 2020 முதல் 2022 வரை மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராக இருந்தார். 2023ஆம் ஆண்டு துருமபுரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்துவருகிறார். 2019 ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[1] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]