இரீத்து பெரி
இரீத்து பெரி (Ritu Beri) என்பவர் ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளர். இவர் மார்ச் 2002-இல் பிரெஞ்சு நயப்புப் போக்கு வணிகக்குறியான ஜீன்-லூயிஸ் ஷெரரின்[3] ஆயத்த ஆடைப் பிரிவின் தலைவரானார்.
| இரீத்து பெரி | |
|---|---|
| படிமம்:RituBeri.jpg | |
| பிறப்பு | 3 மே 1972 புது தில்லி, இந்தியா |
| பணி | ஆடை வடிவமைப்பாளர், ஆலோசகர், ரிஷிஹுட் பல்கலைக்கழகம் |
| விருதுகள் | |
இந்தியாவின் ஆடம்பரத் துறையில் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக இவர் தி லக்சரி லீக் என்ற இலாப நோக்கற்ற அமைப்பைத் தொடங்கினார்.[4] இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் ஒரு பகுதியான காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் ஆலோசகராக[5] நியமிக்கப்பட்டார். இவர் ரிஷிஹூட் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் உள்ளார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
இரீத்து பெரி தில்லியில் பிறந்தார். 2004-ஆம் ஆண்டு ஏற்றுமதியாளர் பாபி சாதாவை மணந்தார்.[7] இவரது தந்தை பல்பீர் சிங் பெரி ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி. இவரது தாயார் இந்து பெரி ஒரு தொழில்முனைவோர்.
தொழில்
2000-ஆம் ஆண்டில், பெரி பிரெஞ்சு நயப்பு போக்கு நிறுவனமான ஜீன் லூயிஸ் ஷெரரின் தலைவரானார்.[8] 2010-ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கத்தால் இரீத்து பெரிக்கு செவாலியர் டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ் (கலை மற்றும் கடிதங்களின் நைட் ஆஃப் தி விருது) வழங்கப்பட்டது.[9] ஏப்ரல் 9, 2016 அன்று, பெரி, தி டிசைன்ஸ் ஆஃப் எ ரெஸ்ட்லெஸ் மைண்ட் மற்றும் தி ஃபயர் ஆஃப் எ ரெஸ்ட்லெஸ் மைண்ட் ஆகிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.[10][11]
கௌரவங்கள்
| ஆண்டு | தலைப்பு |
|---|---|
| 2016 | பவர் பிராண்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேம்[12] |
| 2014 | எசுபானிய அரசாங்கத்தால் குடிமைச் தகுதி ஆணை [2] |
| 2010 | பிரெஞ்சு அரசாங்கத்தால் செவாலியர் டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ்[1] |
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Ritu Beri gets French honour - | Photo1 | India Today |". indiatoday.intoday.in. Retrieved 2016-08-05.
- ↑ 2.0 2.1 IANS (29 November 2014). "Designer Ritu Beri gets Spain honour". Retrieved 2016-08-05.
- ↑ "rediff.com: Ritu Beri takes over at Scherrer". www.rediff.com. Retrieved 2016-07-28.
- ↑ "How Ritu Beri is putting India's luxury labels on the global map". VOGUE India (in அமெரிக்க ஆங்கிலம்). 18 January 2016. Retrieved 2016-08-05.
- ↑ IANS. "Need to make Khadi the fabric of the moment: Ritu Beri". Archived from the original on 30 December 2016. Retrieved 18 May 2018.
- ↑ Admin, India Education Diary Bureau (2020-08-05). "Rishihood University gears up to host 'Atmanirbhar Bharat Summit' – a two-day virtual event". India Education, Education News India, Education News | India Education Diary (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-02-02.
- ↑ "Designer Ritu Beri marries Bobby Chadha". www.indiatraveltimes.com. Retrieved 2016-08-05.
- ↑ "Ritu Beri conferred French honour". Deccan Herald. 22 October 2010. Retrieved 2016-08-05.
- ↑ "Ritu Beri conferred French honour". Deccan Herald. 22 October 2010. Retrieved 2016-08-05.
- ↑ "Fashion designer Ritu Beri launches two books". 2016-04-10. Retrieved 2016-08-05.
- ↑ Beri, Ritu (2016-01-01). The Designs of a Restless Mind (in English) (1ST ed.). Limited Edition an Imprint of Academic Foundation. ISBN 9789332703582.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ ANI (19 July 2016). "Power Brands 2016 launched with special issue of Sunday Indian on Niti Aayog". Retrieved 2016-08-20.