ஊரி அணை (Uri Dam) என்பது இந்தியாவில் சம்மு காசுமீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஊரி அருகே சீலம் ஆற்றில் உள்ள 480 மெகாவாட் நீர்மின் நிலையமாகும். இது இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் இடையிலான எல்லையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நிலையம் பெரும்பாலும் 10 கிமீ சுரங்கப்பாதையுடன் ஒரு மலையின் கீழ் கட்டப்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் சீலம் ஆற்றை ஒழுங்குபடுத்துவதற்கான பிரத்தியேக உரிமையை பாக்கிதானுக்கு வழங்குவதால், இது ஒரு பெரிய அணை இல்லாமல் தடுப்பணை வகையாகும். சூலை 4,2014 அன்று ஊரி I-இன் கீழ்நோக்கி அமைந்துள்ள 240 மெகாவாட் ஊரி-II மின் திட்டம் தொடங்கப்பட்டது.[1]

ஊரி அணை
அதிகாரபூர்வ பெயர்ஊரி
நாடுஇந்தியா
நோக்கம்நீர் மின்சாரம்
நிலைசெயல்பாட்டில்
கட்டத் தொடங்கியது1989
திறந்தது1997
கட்ட ஆன செலவு33 பில்லியன்
அணையும் வழிகாலும்
வகைதடுப்பணை
தடுக்கப்படும் ஆறுசீலம் ஆறு

கட்டுமானம்

ஊரி அணை திட்டம் 1989 அக்டோபரில் தேசிய நீர்மின் கழகத்தால் சுவீடன் சுகான்சுகா தலைமையிலான ஊரி குடிமையியல் என்ற ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டது. இதில் சுவீடன் என். சி. சியும் ஏசியா பிரவுன் பொவரியும், இங்கிலாந்து குவேர்னர் போவிங் ஆகியவை அடங்கும்.[2] இதற்கு சுவிடன், இங்கிலாந்து அரசாங்கங்கள் ஓரளவு நிதியளித்தன.[3] இதன் கட்டுமானப் பணியாளர்களில் சுமார் 200 பேர் வெளிநாட்டினரும் 4,000 பேர் இந்தியர்களும் ஆவர். இவர்களில் பலர் உள்ளூர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.[4] இத்திட்டக் கட்டுமானப் பணி எல்லையைத் தாண்டிய தாக்குதல், சராரி சரீப் எரிப்பு, அசுரத்பால் ஆலய முற்றுகை தொடர்பான அமைதியின்மை ஆகியவற்றுடன் சேர்ந்து 18 மாதத் தாமதத்திற்குப் பின் நிறைவுற்றது.

இத்திட்டத்திற்குச் சுமார் ரூ. 33 பில்லியன் (சுமார் 450 மில்லியன் யூரோ அல்லது 660 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவிடப்பட்டது. இதன் பணிகள் 1997-இல் நிறைவடைந்தது.

செயல்பாடு

ஊர் மின் நிலையம் என். எச். பி. சி. யால் இயக்கப்படுகிறது. ஊரி-II என்ற 250 மெகாவாட் திறன் கொண்ட ஆலையை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் 1998-இல் அறிவிக்கப்பட்டன. இது சிந்து ஆற்று நீர் ஒப்பந்தத்தை மீறுவதாக பாக்கித்தான் அரசு கூறியுள்ளது.[5] சூலை 4,2014 அன்று ஊரி I-இன் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள 240 மெகாவாட் ஊரி-II மின் திட்டம் தொடங்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்

  1. "Modi inaugurates 240 MW Uri-II power project in Kashmir superb". IANS. news.biharprabha.com. Retrieved 5 July 2014.
  2. Qazi, S. A. (2005). Systematic geography of Jammu and Kashmir. New Delhi: APH Publishing. pp. 97–98. ISBN 81-7648-786-4. Retrieved 26 November 2009.
  3. "Uri Hydro-Electric Project, India: Evaluation of the Swedish Support" (PDF). Retrieved 23 November 2018.
  4. K. Santhanam (2003). Jihadis in Jammu and Kashmir: a portrait gallery. SAGE. pp. 241–242. ISBN 0-7619-9785-7. Retrieved 27 November 2009.
  5. "Uri-II Project". NHPC website. Retrieved 27 November 2009.
  6. "Modi inaugurates 240 MW Uri-II power project in Kashmir". The Biharprabha News (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-08-28.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஊரி_அணை&oldid=293816" இலிருந்து மீள்விக்கப்பட்டது