ஏத்தாப்பூர் (ஆங்கிலம்:Yethapur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

ஏத்தாப்பூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் ஆத்தூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

10,968 (2011)

1,371/km2 (3,551/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/yethapur

இப்பேரூராட்சியின் எல்லைகளாக கல்ராயன் மலை, கிழக்கில் பெத்தநாயக்கன்பாளையம், தெற்கில் புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி, மேற்கில் வைத்தியகவுண்டன்புதூர் ஊராட்சி மற்றும் கல்யாணகிரி ஊராட்சி உள்ளது. இப்பேரூராட்சியில் ஏத்தாப்பூர் மற்றும் அபிநவம் என்று இரண்டு வருவாய் கிராமங்கள் உள்ளது. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள முத்துமலை முருகன் கோயில் இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது.

அமைவிடம்

ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு மேற்கில் சேலம் 41 கி.மீ.; கிழக்கில் ஆத்தூர் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஏத்தாப்பூரின் 2 கி.மீ. தொலைவில் தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 26 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,866 வீடுகளும், 10,968 மக்கள்தொகையும் கொண்டது. [5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ஏத்தாப்பூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Ethapur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=ஏத்தாப்பூர்&oldid=302856" இலிருந்து மீள்விக்கப்பட்டது