ஔரையா
ஔரையா (Auraiya), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஔரையா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்மேற்கே 247 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
ஔரையா | |
|---|---|
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஔரையா நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 26°28′N 79°31′E / 26.47°N 79.52°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | ஔரையா மாவட்டம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 9 km2 (3 sq mi) |
| ஏற்றம் | 137 m (449 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 87,736 |
| • அடர்த்தி | 9,700/km2 (25,000/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | இந்தி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 206122 |
| வாகனப் பதிவு | UP-79 |
| இணையதளம் | https://auraiya.nic.in/ |
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 வார்டுகளும், 15,898 குடியிருப்புகளும் கொண்ட ஔரையா நகரத்தின் மக்கள் தொகை 87,736 ஆகும். அதில் 46,196 ஆண்கள் மற்றும் 41,540 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.16 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.25 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 15.42 % மற்றும் வீதம் 0.03 % உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.26% , இசுலாமியர் 12.39% மற்றும் பிற சமயத்தினர் 0.34% வீதம் உள்ளனர். [1]
போக்குவரத்து
ஔரையா நகரத்திற்கு வடக்கே 17.0 கிலோ மீட்டர் தொலைவில் பிரபுந்து எனும் ஊரில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
- ↑ Auraiya Town Population Census 2011
- ↑ https://en.wikipedia.org/wiki/Phaphund_railway_station Phaphund railway station]