பாகவத புராணத்தின் படி, கம்சன் என்பவன் கிருட்டிணனின் தாயான தேவகியின் உடன் பிறந்தவனும் மதுராவைத் தலைநகராகக் கொண்ட விருசினி இராச்சியத்தின் மன்னனும் ஆவான். இவனுடைய தந்தை உக்கிரசேனர், தாயார் பத்மாவதி.

ஸ்ரீகிருஷ்ணர் கம்சனை கொல்தல்
வசுதேவர் - தேவகியின் 8வது குழந்தையை கம்சன் கொல்ல முயற்சிகையில், யோக மாயா தோன்றுதல்

வசுதேவர்-தேவகியின் இணையரின் எட்டாவது மகனால் இவனுக்கு சாவு நேரும் என்று கணிக்கப்பட்டதால் கம்சன், தேவகியையும் அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். எனினும் பின்னாளில் கிருட்டிணன் பிறந்து வளர்ந்து கம்சனைக் கொன்றார்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கம்சன்&oldid=314779" இலிருந்து மீள்விக்கப்பட்டது