கம்பைநல்லூர்
கம்பைநல்லூர் (ஆங்கிலம்:Kambainallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
| கம்பைநல்லூர் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| வட்டம் | காரிமங்கலம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ரெ. சதீஷ், இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
12,194 (2011[update]) • 1,684/km2 (4,362/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 7.24 சதுர கிலோமீட்டர்கள் (2.80 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/kambainallur |
அமைவிடம்
இப்பேரூராட்சி தருமபுரியிலிருந்து 25 கி.மீ துாரத்திலும். மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
7.24 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 31 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அரூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,024 வீடுகளும், 12,194 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ காரிமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kambainallur Population Census 2011