கயந்தலை (Audio file "Ta-கயந்தலை.ogg" not found) என்னும் சொல்லானது பெரிய தலையைக் குறிக்கும். யானைகளில் பெண்யானைகளின் தலை ஆண் யானையின் தலையை விடச் சற்று பெரிதாக இருக்கும். எனவே பெண்யானைகளைக் கயந்தலை மடப்பிடி என முன்னோர் வழங்கினர். அன்றியும் குட்டி யானைகளின் தலையும் அதன் அளவை நோக்கச் சற்றே பெரிது. எனவே அவற்றையும் கயந்தலை என்றனர். மேலும் மக்கள் பெறும் குழந்தைகளின் தலையும் அவ்வாறே சற்று பெரிது. எனவே குழந்தைகளையும் அவ்வாறே கயந்தலை என்றனர்.

  • குழந்தையைக் கயந்தலை எனல் [1][2][3][4][5]
  • முருகன் [6] பலராமன், திருமால் [7] ஆகியோரைக் கயந்தலை என்றது.
  • யானைக் கன்றைக் கயந்தலை என்றனர் [8][9][10]
  • பெண்-யானையைக் கயந்தலை என்றனர்.[11][12]
படிமம்:Elephant indian.JPG
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி (குறுந்தொகை 394)
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை! - பரிபாடல் 5
படிமம்:US Navy 100121-N-6410J-485 Medical professionals aboard the Military Sealift Command hospital ship USNS Comfort (T-AH 20) delivered baby Esther at 2-27 p.m. on Jan. 21, 2010. She is the first baby delivered aboard the 1,000-bed.jpg
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி - தொல்காப்பியம் கற்பியல் 6

அடிக்குறிப்பு

  1. கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி - தொல்காப்பியம் கற்பியல் 6
  2. வையையில் நீராடச் சென்ற நிலத்திணை காட்டும் ஒப்பனை செய்யப்பட்டுள்ள புதல்வர் - வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்
    கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ, - பரிபாடல் 16
  3. அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
    கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும் - புறநானூறு 325
  4. வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந் தலை,
    புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்,
    வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் - புறநானூறு 324
  5. கயந் தலைக் குழவி சேரி அம் பெண்டிர்
    கயந்தலைக் குழவி - நற்றிணை 171
  6. மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை! - பரிபாடல் 5
  7. அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
    மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி, - பரிபாடல் 15
  8. துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
    பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ - கலித்தொகை 11
  9. கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி,
    சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு - அகநானூறு 121
  10. முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி
    நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
    குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி, - குறுந்தொகை 394
  11. கயந்தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
    களிறு விளிப்படுத்த கம்பலை - அகநானூறு 165
  12. கயந்தலை மடப் பிடி புலம்ப - புறநானூறு 303
"https://tamilar.wiki/w/index.php?title=கயந்தலை&oldid=315159" இலிருந்து மீள்விக்கப்பட்டது