கருப்பூர்
கருப்பூர் (ஆங்கிலம்:Karuppur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
| கருப்பூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சேலம் |
| வட்டம் | ஓமலூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
13,003 (2011[update]) • 896/km2 (2,321/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 14.52 சதுர கிலோமீட்டர்கள் (5.61 sq mi) |
இங்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாட்லிங் பிளாண்ட், இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது. மேலும் அரசு பொறியியற் கல்லுரி மற்றும் பெரியார் பல்கலைகழகத்தின் உறுப்புக் கல்லூரி இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது. இங்கு இஸ்கான் கோவில், முருகன் கோவில் மற்றும் காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது
அமைவிடம்
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 8 கி.மீ.; மேற்கில் ஈரோடு 45 கி.மீ.; வடக்கில் தர்மபுரி 56 கி.மீ.; தெற்கில் நாமக்கல் 56 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
14.52 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 39 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,707 குடும்பங்களும், 13,967 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 73.21% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 945 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ கருப்பூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ [ https://www.census2011.co.in/data/town/803453-karuppur-tamil-nadu.html Karuppur Population Census 2011]