கவுஞ்சி (Kavunji) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமமாகும். கொடைக்கானல் வட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு முனையில் உள்ள மன்னவனூர் பஞ்சாயத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. கொடைக்கானலில் இருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் கவுஞ்சி கிராமம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,920 மீட்டர் (6,300 அடி) உயரத்தில், 10°12′26″வடக்கு 77°20′25″கிழக்கு என்ற புவியியல் ஆள்கூறுகளில் இக்கிராம அடையாளப்படுத்தப்படுகிறது. கவுஞ்சி கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 624103 என்பதாகும். கவுஞ்சி கிராமத்தில் காய்கறி விவசாயம் முழுமையான வீச்சில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.[1]

படிமம்:AMS-Upper Palani Reserve Forest copy.jpg
கவுஞ்சி கிராமத்தைக் காட்டும் மேல் பழனி காப்புக் காடு

வரலாறு

கவுஞ்சி கிராமத்தில் தமிழ் மொழி கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு கி.பி. 1091 தேதியிட்டதாக நம்பப்படுகிறது.[2] கவுஞ்சி மக்கள் இந்தக் கல்வெட்டு ஒரு சர்ச்சையின் விவரங்களையும் முடிவுகளையும் தொடர்புபடுத்துகிறது என்று நம்புகிறார்கள். இந்தக் கல்வெட்டு 4 அடிக்கு 3 அடி (1.22 மீட்டருக்கு 0.91 மீ) என்ற அளவில் காணப்படுகிறது.[3]

குடிநீர்

1999 ஆம் ஆண்டு கவுஞ்சி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருவிற்கும் தனித்தனி குழாய் இணைப்புடன் கூடிய குடிநீர் வசதியை பாலகேர்சு அறக்கட்டளை இந்த கிராமத்திற்கு நன்கொடையாக வழங்கியது.

சுகாதாரம்

1998 ஆம் ஆண்டு, சிறீ பாலா மருத்துவ மையம் பாலா கேர் அறக்கட்டளையால் இக்கிராமத்தில் திறக்கப்பட்டது.[4]

கல்வி

கவுஞ்சியில் ஒரு தொடக்கப்பள்ளி, பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. கவுஞ்சியில் தற்பொழுது  மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Raju, K. (2008-12-13). "Kavunji to adopt cluster farming". தி இந்து: pp. front page இம் மூலத்தில் இருந்து 2008-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081213102041/http://www.hindu.com/2008/12/13/stories/2008121357600100.htm. பார்த்த நாள்: 2009-06-21. 
  2. Sewell, Robert (1882). "Palni Taluk and the Palni Hills". Lists of the Antiquarian Remains in the Presidency of Madras. New imperial series. Vol. VII. (Reports. ed.). Archaeological survey of India. pp. 72 'Ettur'.  இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  3. Indian antiquary. Vol. Item notes: v. 38. Royal Anthropological Institute of Great Britain and Ireland. 1909. p. 54. ISBN 0-89581-957-0.  இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  4. Murali, D.; R.S. Murali (2008-03-22). "From Tennessee to Kavunji, on a rural healthcare mission". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081105125359/http://www.hindu.com/thehindu/holnus/002200803221119.htm. பார்த்த நாள்: 2009-06-21. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கவுஞ்சி&oldid=320779" இலிருந்து மீள்விக்கப்பட்டது