குசால் சார் (Khushal Sar) என்பது இந்தியாவின் சம்மு-காசுமீர் மாநிலத்தின் சிறீநகரிலுள்ள ஏரியாகும். தற்பொழுது மிகவும் மோசமடைந்த நிலையில் இந்த ஏரி உள்ளது. சட்டவிரோதமான கட்டுமானம், நிலநிரப்பல் உள்ளிட்ட காரணங்கள் மூலம் பல இடங்களில் ஏரியானது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.[1] குசால் சார் ஏரி ஒரு காலத்தில் இயூனிமாரிலிருந்து ஆலி பள்ளிவாசல் வரை பரவியிருந்தது. ஆனால் இப்போது இது கணிசமாகக் குறைந்துள்ளது. குசால் சார் ஏரி ஒரு சிறிய கால்வாய் வழியாக அஞ்சார் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கில்சர் என்று அழைக்கப்படும் மற்றொரு சிறிய ஏரி, கில் கடல் என்று அழைக்கப்படும் பாலத்தால் பரவியுள்ள ஒரு குறுகிய நீரிணை வழியாக குசால் சார் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கில்சர் ஏரி, நல்லா அமீர் கான் வழியாக நைகீன் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டு வரை, மார் கால்வாய் இந்த ஏரியில் தண்ணீரை வடிகட்டி அஞ்சார் ஏரி வழியாக கந்தர்பால் வரை செல்ல வழிவகுத்தது. மார் கால்வாய் நிரம்பிய பிறகு, ஏரியின் நிலை மேலும் மோசமடைந்தது.[2][3]

குசால் சார்
Khushal Sar
படிமம்:Khushal Sar From North.jpg
வடக்கு கடற்கரையிலிருந்து குசால் சார் ஏரியின் தோற்றம்
அமைவிடம்சிறிநகர், சம்மு காசுமீர்
ஆள்கூறுகள்34°06′41.34″N 74°47′58″E / 34.1114833°N 74.79944°E / 34.1114833; 74.79944
முதன்மை வெளியேற்றம்அன்சார் ஏரி செல்லும் கால்வாய்
அதிகபட்ச நீளம்1.6 km (0.99 mi)
அதிகபட்ச அகலம்0.6 km (0.37 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,582 m (5,190 அடி)

மேற்கோள்கள்

  1. "Encroachments killing Khushal Sar". 15 May 2012 இம் மூலத்தில் இருந்து April 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402173318/http://www.greaterkashmir.com/news/2012/May/15/encroachments-killing-khushal-sar-18.asp. 
  2. "Khushal Sar Breathing its last". 26 Oct 2013 இம் மூலத்தில் இருந்து 2015-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402194214/http://www.greaterkashmir.com/news/2013/Oct/26/khushal-sar-breathing-its-last--30.asp. 
  3. "Prominent Lakes of Kashmir Division". J&K Envis Centre. 2012. Archived from the original on 5 March 2018. Retrieved 7 March 2018.
"https://tamilar.wiki/w/index.php?title=குசால்_சார்&oldid=331265" இலிருந்து மீள்விக்கப்பட்டது