கேலிக்சு (Calyx) என்பது குப்பி போன்ற பகுதி அல்லது கட்டமைப்புகளுக்கு விலங்கு உடற்கூறியல் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.

சொற்பிறப்பியல்

இலத்தீன் மொழியிலிருந்து கேலிக்சு (calyx)(பண்டைய கிரேக்க κάλύξ, மொட்டு வழக்கு, உமி") என்ற சொல் பெறப்பட்டுள்ளது.

கடற்காஞ்சொறி

சில மென்மையான பவளப்பாறைகளின் (காலிக்சு என்றும் அழைக்கப்படுகிறது) பாலிப்பின் மேல் தலையுணர் நீட்சிப் பகுதியின் அடித்தளப் பகுதியைக் கொண்ட நுண்முட்கள்

என்டோப்ரோக்டா

என்டோபிராக்டாவின் ஓர் உடல் பகுதி. இதிலிருந்து உணர் நீட்சிகள் எழுகின்றன. வாயும் ஆசனவாயும் இங்கு அமைந்துள்ளன.[1]

முட்தோலிகள்

உடல் வட்டு என்பது தோலால் மூடப்பட்டிருக்கும். இதில் கால்சிய தகடுகள் (கிரினாய்டுகள் மற்றும் ஓபியூராய்டுகளில் உடலின் முக்கிய பகுதியான உள்ளுறுப்பு பகுதி) உள்ளன.[2]

மனிதன்

சிறுநீரகத்தில் ஒரு சிறிய காலக்சு, இரண்டு அல்லது மூன்று சிறிய காலிக்சுகளின் தொகுப்பு ஒரு பெரிய காலக்சாக காணப்படும். பாலூட்டி கேட்புலத்தொகுதியில் மத்திய நரம்பு மண்டலத்தில் குறிப்பாகப் பெரிய நரம்பிணைப்பு, கேலிக்சு கெல்டு எனப்படும். எச். கெல்டு தனது கட்டுரையான Die centrale Gehörleitung-இல்[3] 1893-இல் கேலிக்சு கெல்டு என இதன் மலர்-இதழ் போன்ற வடிவம் காரணமாகப் பெயரிட்டார்.[4]

பூச்சிகள்

ஆண் பூச்சிகளில், விந்து வெளியேற்றுக் குழாயின் அடித்தளப் பகுதியின் புனல் வடிவ விரிவாக்கமாக (விந்தணு குழாயின் ஒரு பகுதி) காணப்படும். மேலும் பூச்சியியலில், ஒரு பூச்சியின் மூளையில் நரம்பில் தட்டையான தொப்பி (கார்பசு பெடுன்குலட்டம் ஒரு கூறு மற்றும் சில பெண் பூச்சிகள், கருப்பைகள் திறக்கும் கருநீள் பையின் விரிவாக்கமாக கேலிக்சு உள்ளது.

மேலும் காண்க

  • கலிக்ஸ் (தாவரவியல்)

மேற்கோள்கள்

  1. R.C.Brusca, G.J.Brusca. Invertebrates. Sinauer Associates, 2 ed.(2003)
  2. A.R.Maggenti et al., Online Dictionary of Invertebrate Zoology, digitalcommons.unl.edu, 2005
  3. Held, H."Die centrale Gehörleitung" Arch. Anat. Physiol. Anat. Abt, 1893
  4. Satzler, K., L. F. Sohl, et al. (2002). "Three-dimensional reconstruction of a calyx of Held and its postsynaptic principal neuron in the medial nucleus of the trapezoid body." J Neurosci 22(24): 10567-79.
"https://tamilar.wiki/w/index.php?title=கேலிக்சு&oldid=340684" இலிருந்து மீள்விக்கப்பட்டது