கொருத்தோடு
கொருத்தோடு (Koruthodu) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளி தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது முண்டகாயத்திலிருந்து சபரிமலை கோவிலுடன் கேரளாவை இணைக்கும் நெடுஞ்சாலையில், பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களின் எல்லையில் கொருத்தோடு கிராமம் உள்ளது. கொருத்தோடில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் முண்டக்காயம் நகரம் உள்ளது. பம்பாவின் துணை ஆறான அழுதா ஆறு இந்த கிராமத்தின் எல்லை வழியாக ஓடுகிறது. கானமலா, வந்தன்பதால், முண்டக்காயம் மற்றும் பணக்கச்சிரா ஆகியவை அருகிலுள்ள பிற ஊர்களாகும்.
கொருத்தோடு Koruthodu | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°28′0″N 76°57′0″E / 9.46667°N 76.95000°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | கோட்டயம் |
| அரசு | |
| • நிர்வாகம் | கொருத்தோடு கிராமப் பஞ்சாயத்து |
| மக்கள்தொகை (2008) | |
| • மொத்தம் | 21,470 |
| மொழிகள் | |
| • அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 686513 |
| தொலைபேசிக் குறியீடு | 04828 |
| வாகனப் பதிவு | கே,எல்-34 |
| அருகிலுள்ள நகரம் | கோட்டயம், முண்டக்காயம். |
| மக்களவை (இந்தியா) தொகுதி | பத்தனம்திட்டா |
| குடிமை நிறுவனம் | கொருத்தோடு |
| இந்தியாவின் தட்பவெப்ப நிலை | குளிர்ச்சியும் இனிமையும் (கோப்பென்) |
காபி, மரவள்ளிக்கிழங்கு, வாழை, மிளகு, கோகோ மற்றும் இயற்கை ரப்பர் ஆகியவை கொருத்தோடு கிராமத்தில் விளையும் முக்கிய பயிர்களாகும்.[1]
குறிப்பிடத்தக்க தடகள வீரர்கள்[2]
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி பன்னாட்டு விமான நிலையம் கொருத்தோடு கிராமத்திற்கு அருகில் உள்ளது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "കോരുത്തോട് ഗ്രാമപഞ്ചായത്ത് (Koruthodu Grama Panchayat)". lsgkerala.in. Archived from the original on 7 November 2016. Retrieved 2015-02-11.
- ↑ "The true DRONACHARYA - The Hindu". thehindu.com. Retrieved 2015-02-11.
