கோபாய் ஆறு
கோபாய் ஆறு (Kopai River) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். சால் ஆறு என்ற பெயராலும் இந்த ஆறு அழைக்கப்படுகிறது. பக்ரேசுவர் நதியின் துணை ஆறாக இது அறியப்படுகிறது.[1][2] இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் உள்ள சாந்திநிகேதன், போல்பூர், கங்கலிடாலா, கிர்னகார் மற்றும் லாப்பூர் போன்ற நகரங்களைக் கடந்து கோபாய் ஆறு பாய்கிறது. வறண்ட பருவத்தில் ஒரு சிறிய ஆறாகவும், ஆனால் பருவமழையின் போது இதன் கரைகளை நிரப்பியும் ஓடுகிறது.[3] இந்த ஆற்றின் அருகே சோரா (சோடா) என்ற கிராமம் உள்ளது. மேலும் பர்காடா (பர்கட்டா) நிச்சிண்டா (நிச்சிண்டா) உரூபசுபூர் (ரூபசுப்பூர்) பெருவா (பெருவா) போன்ற கிராமங்களும் இந்த ஆற்றைச் சார்ந்துள்ளன.
| கோபாய் ஆறு Kopai River | |
|---|---|
பல்லாவ்பூரில் கோபாய் ஆறு, பிர்பும் | |
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| நகரங்கள் | சாந்திநிகேதன், கிர்னகார் (மிராட்டி), இலாபூர் |
| சிறப்புக்கூறுகள் | |
| வெளியேற்றம் | |
| • அமைவு | மயூராக்சி ஆறு |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| துணை ஆறுகள் | |
| • இடது | பக்ரேசுவர் நதி |
இலக்கிய சங்கம்
ஆற்றைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும்பாலும் ஊதா மண் உள்ளது. இது ஆற்றின் கரையில் பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது. கோவாய் என்று பிரபலமாகவும் உள்ளது. இப்பகுதியில் உள்ள இலக்கிய பிரமுகர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. [4] இரவீந்திரநாத் தாகூரால் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது --
- அமதர் சோட்டோ நாடி சலே பாங்கே பங்கே
- பைசாக் மாசு தார் ஆட்டு இயல் தாக்கே
- நமது சிறிய நீரோடை வளைவுகளில் வளைந்து முன்னோக்கிச் செல்கிறது பைசாக் மாதத்தில் முழங்கால் ஆழமான நீர் மட்டுமே உள்ளது.
- நமது சிறிய நீரோடை வளைவுகளில் வளைந்து முன்னோக்கிச் செல்கிறது பைசாக் மாதத்தில் முழங்கால் ஆழமான நீர் மட்டுமே உள்ளது.
ஆற்றில் உள்ள அரிவாள் வடிவிலான, கால்வாய் போன்ற வளைவு அன்சுலி பாங்கர் உபகதா என்ற நாவலின் தலைப்புக்கு தூண்டுதலானது. தாராசங்கர் பந்தோபாத்யாய் எழுதிய இந்நாவல் தபன் சின்கா என்ற திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது.
தொல்லியல்
கிமு 1250-1000 காலத்தைச் சேர்ந்த படிகக் கல் மற்றும் கல்லான மரத்தின் நுண்கற்கள் அச்சய்-குனூர்-கோபாய் நதி அமைப்பில் பல இடங்களில் காணப்படுகின்றன.[5]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Rivers". West Bengal Tourism. Archived from the original on November 9, 2009. Retrieved 2009-02-14.
- ↑ "River System". Birbhum district administration. Retrieved 2009-02-14.
- ↑ "Kopai River". india9.com. Retrieved 2009-02-14.
- ↑ Halder, Ritam (2008-07-04). "Next weekend you can be at ...Santiniketan". Calcutta, India: The Telegraph, 4 July 2008 இம் மூலத்தில் இருந்து 4 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130204113345/http://www.telegraphindia.com/1080704/jsp/guwahati/story_9161085.jsp.Halder, Ritam (4 July 2008). "Next weekend you can be at ...Santiniketan". Calcutta, India: The Telegraph, 4 July 2008. Archived from the original on 4 February 2013. Retrieved 14 February 2009.
- ↑ "Ancient Bengal in Ancient India". Retrieved 2009-02-14.
வெளி இணைப்புகள்