கோவை - 54 (நெல்)
கோவை 54 (CO 54) என்பது, CB 04110 x CB 05501 கலப்பினத்தால் உருவான CB 12588 என்ற தமிழ்நாட்டின் நெல் வகையாகும். CO 51 மற்றும் ADT 43 க்கு மாற்று இரகமாக கோ 54 உருவாக்கப்பட்டதாகும்.மேலும் நடுத்தர உயரத்தில் வளரக்கூடிய இரகம், 105 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது (வேறுறொரு மூலாதாரத்தின்படி 115 – 120 நாட்கள் எனப்படுகிறது.[1]).[2]
| கோவை - 54 CO 54 |
|---|
| வேளாண் பெயர் |
| CB 12588 |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| CB 04110 x CB 05501 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 115 - 120 நாட்கள் |
| மகசூல் |
| 6354 கிலோஎக்டேர் |
| வெளியீடு |
| 2021 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TNAU, கோவை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
வெளியீடு
தமிழ்நாட்டின் கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2021 ஆம் ஆண்டு, இந்நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
மகசூல்
பல்வேறு மகசூல் சோதனைகளில் CB 12588 ஒட்டுமொத்த சராசரியாக தானிய மகசூல், எக்டேருக்கு 6354 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது கோவை - 51 ஐ விட 10.83 சதவீத முன்னேற்றத்தையும் ஆடுதுறை - 43 ஐ விட 10.35 சதவீத முன்னேற்றத்தையும் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிக வேளாண் மற்றும் உடலியல் செயல்திறன் காரணமாக கோ 54 அதிக மகசூல் தரும் திறனைக் கொண்டுள்ளதாகவும், ஈரோடு மாவட்டம் பவானிசாகரின் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் எக்டேருக்கு அதிகபட்ச மகசூல் 9259 கிலோவாக பதிவாகியுள்ளது. தகவமைப்பு ஆராய்ச்சி சோதனையில் 16 இடங்களில் எக்டேருக்கு 7000 கிலோவிற்கு மேல் அதிக மகசூல் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.[2]
சான்றுகள்
- ↑ https://www.tnauagricart.com/productDetails/15623ee0d7b8cdb79fc6
- ↑ 2.0 2.1 2.2 "CO 54 (IET 24313) : An early maturing high yielding rice variety with marketable grain quality suitable for Tamil Nadu". www.ejplantbreeding.org (ஆங்கிலம்) - © 2020. Retrieved 2025-06-18.