கோ மக்கள் அல்லது சித்ராலி மக்கள் (Kho People)[2][3] பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மேல் சித்ரால் மாவட்டம், கீழ் சித்ரால் மாவட்டம் மற்றும் கில்ஜித் பால்டிஸ்தான் பிரதேசத்தின் அதிகம் வாழும் மக்கள் ஆவார். இம்மக்களில் பெரும்பான்மையோர் சன்னி இசுலாமை பின்பற்றுகின்றனர். இம்மக்கள் இந்தோ-ஆரிய மக்களில் ஒரு பிரிவினர் ஆவார்[4][5]. இவர்களின் தாய் மொழி இந்தோ-ஆரிய மொழிகளில் ஒன்றான தார்திக் மொழியின் உட்பிரிவான கோவார் மொழி ஆகும். 2021ஆம் ஆண்டில் கோ மக்களின் மக்கள் தொகை எறத்தாழ 8,00,000 ஆகும். இந்தியப் பிரிவினைக்கு முன்னர் இம்மக்கள் சித்ரால் இராச்சியப் பகுதிகளில் வாழ்ந்தனர்.

கோ மக்கள்
کھو
படிமம்:H.H. Fateh-ul-Mulk, Mehtar of Chitral.jpg
சித்ரால் இராச்சிய மன்னர் பதே உல் முல்க் நசீர்
மொத்த மக்கள்தொகை
800,000 (2021)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
சித்ரால் மற்றும் கில்கிட் பால்டிஸ்தான்
மொழி(கள்)
முதன்மை மொழி: கோவார் மொழி
இரண்டாம் மொழி: உருது
சமயங்கள்
படிமம்:Star and Crescent.svg இசுலாம் (பெரும்பான்மையாக சன்னி முஸ்லீம்கள், சிறுபான்மையாக சியா முஸ்லீம்கள் உள்ளனர்.)[1]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இந்தோ ஆரிய மக்கள்

மேற்கோள்கள்

  1. Olson, James Stuart (1998). An Ethnohistorical Dictionary of China (in ஆங்கிலம்). Greenwood Publishing Group. p. 177. ISBN 978-0-313-28853-1.
  2. O'Leary, Clare F.; Rensch, Calvin Ross; Decker, Sandra J. (1992). Sociolinguistic Survey of Northern Pakistan: Languages of Chitral (in ஆங்கிலம்). National Institute of Pakistan /* Location and demographics */ at Quaid-i-Azam University. p. 22.
  3. Osella, Filippo; Osella, Caroline (16 May 2013). Islamic Reform in South Asia (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 235. ISBN 978-1-107-27667-3.
  4. Olson, James Stuart (1998). An Ethnohistorical Dictionary of China (in ஆங்கிலம்). Greenwood Publishing Group. p. 177. ISBN 978-0-313-28853-1. The Kho people are the most important ethnic group in the Chitral region of northern Pakistan. They are an Indo-Aryan people who are Muslims, primarily Sunnis of the Hanafi tradition.
  5. "Khowar". Ethnologue (in ஆங்கிலம்).

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோ_மக்கள்&oldid=343243" இலிருந்து மீள்விக்கப்பட்டது