க. சுந்தரம்
க. சுந்தரம் (K. Sundaram)(1 சூலை 1949-18 செப்டம்பர் 2024[1]) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1989[2] மற்றும் 1996 தேர்தல்களில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3] இந்ததொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருகென ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[4] சுந்தரம் கருணாநிதி அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பால்வளத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
க. சுந்தரம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | கே. பி. கே. சேகர் |
| பின்னவர் | இ. இரவிக்குமார் |
| தொகுதி | பொன்னேரி |
| பதவியில் 1996–2001 | |
| முன்னையவர் | இ. இரவிக்குமார் |
| பின்னவர் | எ. எசு. கண்ணன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சூலை 1949 மீஞ்சூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி, அரசியல்வாதி |
2005 சூன் மாதம் தமிழ்நாடு காவல்துறையினரால் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட சில தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் இவரும், இவருடைய மனைவியும், இரண்டு மைத்துனர்களும் அடங்குவர்.[5] இவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் 2015ஆம் ஆண்டு இந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[6]
மேற்கோள்கள்
- ↑ The Hindu Bureau (2024-09-18). "Former Minister K. Sundaram is no more; CM Stalin mourns his death". The Hindu (in Indian English). Retrieved 2024-09-18.
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 20.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Retrieved 2017-05-06.
- ↑ Sangameswaran, K. T. (16 June 2005). "Kannappan charge sheeted". The Hindu. http://www.thehindu.com/2005/06/16/stories/2005061604420600.htm. பார்த்த நாள்: 2017-05-17.
- ↑ Raj, Manish (24 July 2015). "Former Tamil Nadu minister Raja Kannappan acquitted in disproportionate assets case". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Former-Tamil-Nadu-minister-Raja-Kannappan-acquitted-in-disproportionate-assets-case/articleshow/48206161.cms. பார்த்த நாள்: 2017-05-17.