சல்மா அணை
சல்மா அணை (Salma Dam) அல்லது இந்தியா ஆப்கனிஸ்தான் நட்புறவு அணை என்பது இந்தியாவின் நிதியுதவியுடன் ஆப்கானிஸ்தான் நாட்டில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கம் மற்றும் நீர் மின்நிலையத் திட்டமாகும். இந்தியா உடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கான் அமைச்சரவை சல்மா அணை என்ற பெயரை மாற்றி இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு அணை எனப் பெயரிட்டது.[1]
| சல்மா அணை | |
|---|---|
| அதிகாரபூர்வ பெயர் | Afghan-India Friendship Dam |
| நாடு | ஆப்கானித்தான் |
| அமைவிடம் | சிஸ்டி மாவட்டம் |
| நிலை | Completed |
| கட்டத் தொடங்கியது | 1976 |
| திறந்தது | 4 சூன் 2016 |
| கட்ட ஆன செலவு | US$ 290 மில்லியன் |
| இயக்குனர்(கள்) | WAPCOS |
| அணையும் வழிகாலும் | |
| தடுக்கப்படும் ஆறு | ஹரி ஆறு |
| உயரம் | 107.5 m (353 அடி) |
| நீளம் | 551 m (1,808 அடி) |
| நீர்த்தேக்கம் | |
| செயலில் உள்ள கொள் அளவு | 560×106 m3 (453,999 acre⋅ft) |
| செயலற்ற கொள் அளவு | 633×106 m3 (513,181 acre⋅ft) |
| நீர்ப்பிடிப்பு பகுதி | 11,700 km2 (4,500 sq mi) |
| சுழலிகள் | 3 × 14 MW |
| நிறுவப்பட்ட திறன் | 42 MW |
| Annual உற்பத்தி | 86.6 GWh |
இந்த நீர்மின் திட்டத்தின் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் அத்தோடு 75000 ஹெக்டேர் பாசன வசதி பெரும். இந்த அணை இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆப்கான் ஜனாதிபதி ஆகியோரால் ஜூன் 4, 2016 அன்று திறந்துவைக்கப்பட்டது.