சாகேத்
சாகேத் (Saket), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள தெற்கு தில்லி மாவட்டம் மற்றும் சாகேத் வருவாய் வட்டத்தின்[1] நிர்வாகத் தலைமையிடம் ஆகும். தெற்கு தில்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மெஹ்ரௌலி- பதர்பூர் சாலையில் (Mehrauli - Badarpur Rd) சாகேத்தில் அமைந்துள்ளது. இது புது தில்லிக்கு தெற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகர்புறத்திற்கு அயோத்திக்கு வேறு பெயரான சாகேதம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சாகேத் | |
|---|---|
சாகேத்தின் சாலை | |
இந்தியாவின் தில்லி மாநிலத்தின் தெற்கு தில்லி மாவட்டத்தில் சாகேத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 28°31′09″N 77°12′48″E / 28.5192°N 77.2134°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தில்லி |
| மாவட்டம் | தெற்கு தில்லி மாவட்டம் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | இந்தி மொழி, ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 10017 |
| இணையதளம் | https://dmsouth.delhi.gov.in/ |
போக்குவரத்து
சாகேத் நகரத்தில் இரண்டு மஞ்சள் வழித்தட மெட்ரோ நிலையங்கள் உள்ளது. 1. சாகேத் மெட்ரோ நிலையம் 2. மாளவியா நகர மெட்ரோ நிலையம். கீழ்கண்ட பேருந்து எண்கள் சாகேத் நகர்புறத்தின் வழியாகச் செல்கிறது. அவைகள்: 427, 493, 500, 501, 512, 522A, 532, 534, 448, 448A, 548 மற்றும் 681.