சிவசங்கரி (பிறப்பு: அக்டோபர் 14, 1942) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.

சிவசங்கரி
பிறப்புஅக்டோபர் 14, 1942)
பெற்றோர்சூர்யநாராயணன், ராஜலெக்ஷ்மி
இ. தியாகலிங்கம்,சிவசங்கரி, திரு மாலன், அமரர் பொன்னுத்துரையுடன்
இ. தியாகலிங்கம்,சிவசங்கரி, திரு மாலன், அமரர் பொன்னுத்துரையுடன்

வாழ்க்கைச் சுருக்கம்

சிவசங்கரி எழுத்தாளர் ஆவதற்கு முன்னர் நேஷனல் சிட்டி வங்கியில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார்.[1] அவர் கணவர் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் மண்டல மேலாளராகப் பணியாற்றியவர். சிவசங்கரி மாமனார் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி என்னும் சிற்றூரில் தொடங்கிய தொழிற்சாலை கவனித்துகொள்வதற்காக சிவசங்கரியும் அவர் கணவரும் தமது வேலைகளைத் துறந்துவிட்டு அவ்வூருக்குச் சென்று வாழ்ந்தனர். நடிகையும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதா இவருக்குத் தோழியாவார்.[1]

எழுத்துலகில்

இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 மே 12 ஆம் நாளிட்ட கல்கி இதழில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர்.[1] இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார்.

விருதுகள்

படைப்புகள்

நாவல்கள்

  • எதற்காக? - 1970
  • திரிவேணி சங்கமம் - 1971
  • ஏன்? - 1973
  • சியாமா - 1973
  • நண்டு - 1975
  • நதியின் வேகத்தோடு - 1975
  • மெள்ள மெள்ள - 1978
  • 47 நாட்கள் - 1978
  • அம்மா, ப்ளீஸ் எனக்காக - 1979
  • ஆயுள் தண்டனை - 1979
  • வளர்த்த கடா - 1979
  • இரண்டு பேர் - 1979
  • ஒரு மனிதனின் கதை - 1980
  • பிராயச்சித்தம் - 1981
  • போகப்போக - 1981
  • நெருஞ்சி முள் - 1981
  • தவம் - 1982
  • திரிசங்கு சொர்க்கம் - 1982
  • மாலையில் பூக்கும் மலர்கள் - 1982
  • பறவை - 1982
  • பாலங்கள் - 1983
  • ஆயிரங்காலத்துப் பயிர் - 1983
  • கருணைக் கொலை - 1984
  • அவன் - 1985 ('சுபஹ்' என்ற ஹிந்தி தொலைக்காட்சித் தொடராக வெளியிடப்பட்டது)
  • ஒற்றைப் பறவை - 1985
  • அது சரி, அப்புறம்? - 1985
  • நூலேணி - 1985
  • அம்மா பிள்ளை - 1986
  • மலையின் அடுத்த பக்கம் - 1987
  • வேரில்லாத மரங்கள் - 1987
  • வானத்து நிலா - 1989
  • ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் - 1989
  • நான் நானாக - 1990
  • சுட்டமண் - 1991
  • இன்னொருத்தி + இன்னொருத்தி - 1992
  • இனி - 1993

குறுநாவல்கள்

  • சந்தியா ஏன் அழுகிறாள்?
  • காத்திருக்கிறேன்
  • தனிமை
  • எஃப்.பி.ஐ.
  • சுறாமீன்கள்
  • தப்புக்கணக்கு
  • ராமனைப்போல் ஒரு பிள்ளை
  • ஒரு சிங்கம் முயலாகிறது
  • துள்ளமுடியாத புள்ளி மான்
  • ஒருபகல் ஒரு இரவு
  • வெட்கம் கெட்டவர்கள்
  • அம்மா
  • இவளும் அவளும்
  • அவர்களுக்குப்புரியாது
  • தான் தன் சுகம்
  • பார்வை
  • காளான்
  • கடைசியில்
  • கோழைகள்
  • விமோசனம்
  • மூக்கணாங்கயிறு
  • அப்போதும் இப்போதும்
  • நட்பு
  • ஓவர்டோஸ்
  • தகப்பன் சாமி
  • காரணங்கள்
  • அடிமாடுகள்
  • கண்கெட்ட பிறகு
  • இதுவும் தாஜ்மகால்தான்
  • இன்னொரு காரணம்
  • பயிரை மேயும் வேலிகள்
  • தீர்வு
  • மண்குதிரைகள்
  • ருசிகண்ட பூனை
  • இனி தொடராது
  • இரட்டை நாக்குகள்
  • அந்தம்மா ரொம்ப நல்லவங்க
  • கிணற்றுத்தவளைகள்
  • விலை
  • பச்சோந்திகள்
  • ஏரிக்கடியில்
  • உயர்ந்தவர்கள்
  • முதல்கோணன்
  • குட்டி
  • காதல் என்பது எதுவரை
  • நப்பாசை

பயணக்கட்டுரைகள்

  • புதுப்புது அனுபவங்கள் (நான்கு தொகுதிகள்)
  • பாரத தரிசனம்
  • பிரதமருடன் பயணங்கள்
  • மனம் கவர்ந்த மலேசியா
  • புதியசுவடுகள்
  • ஹாங்காங் சைனா பாங்காக்

சிறுகதைகள்

  • உண்மைக்கதைகள்
  • குழப்பங்கள்
  • டிரங்கால்
  • கழுகு
  • அணில்கள்
  • புல்தடுக்கிப் பயில்வான்கள்
  • நட்பு
  • அரவிந்தர் சொல்கிறார்
  • தெப்பக்குளம்
  • அவர்கள் பேசட்டும்
  • பட்டாம்பூச்சியும் தூக்கமும்
  • சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (இரு தொகுதிகள்)

குழந்தைகளுக்கான பேசும் புத்தகம்

  • அம்மா சொன்ன கதைகள் (புத்தகமும் ஒலிநாடாவும் இணைந்தது) - 1996

வாழ்க்கை வரலாறு

  • இந்திராவின் கதை (இந்திராகாந்தி)
  • அப்பா(ஜி.டி. நாயுடு)
  • அறியாத முகங்கள்( ஜி.கே. மூப்பனார் பற்றி)
  • சூரியவம்சம் தன் வரலாறு

இலக்கிய ஆய்வு

  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 1 - தெற்கு - 1998
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 2 - கிழக்கு - 2000
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 3 - மேற்கு - 2004
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 4 - வடக்கு - 2009

மொழியாக்கப்படைப்புகள்

  • கடவுள் ஏன் சிறந்த நண்பர் (சுவாமி சுத்தானந்தா உரைகள்)
  • எண்ணம் வசப்படும் (சுவாமி சுத்தானந்தா உரைகள்)
  • ராவி நதியில் குல்ஸார் சிறுகதைகள்
  • சாய் பாபா இன்னும் வாழ்கிறார் - ஜய வாஹி
  • தீர்க்கதரிசி (டாக்டர் பி.சி. ரெட்டி வாழ்க்கை வரலாறு)
  • ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்

மொழியாக்கங்கள்

  • The Betrayal and Other Stories (ஆங்கில மொழியாக்கம்: அமீதா அக்னிஹோத்ரி, கீதா ராதாகிருஷ்ணன்)
  • Portable Roots (ஆங்கில மொழியாக்கம்: ரேகா ஷெட்டி)
  • Deception (ஆங்கில மொழியாக்கம்: உமா கிரீஷ்)
  • Bridges (ஆங்கில மொழியாக்கம்: எஸ். கிருஷ்ணன்)
  • The Trip to Nowhere (ஆங்கில மொழியாக்கம்: ஷோபனா சுவாமிநாதன், ரேகா ஷெட்டி, ஜானகி விசுவநாதன்)
  • Tyagu (ஆங்கில மொழியாக்கம்: உமா நாராயணன்)

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=சிவசங்கரி&oldid=364495" இலிருந்து மீள்விக்கப்பட்டது