சீட்லா சகாய் (Sheetla Sahai) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியில் ஒரு தலைவராகவும் இருந்தார். மத்தியப் பிரதேசத்தின் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் மத்தியப் பிரதேச அரசாங்க அமைச்சரவையில் ஓர் அமைச்சராகவும் இருந்தார். மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் குவாலியர் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2011 ஆம் ஆண்டில் இவர் இறந்தார்.[1] 1967 ஆம் ஆண்டில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓர் எதிர்க்கட்சித் தலைவராகவும், அமைச்சரவையில் ஓர் அமைச்சராகவும் பணியாற்றினார். சுகாதாரம், வீட்டுவசதி, பொது தொடர்பு, போக்குவரத்து, சிறை, நீர்ப்பாசனம், நர்மதா பள்ளத்தாக்கு மேம்பாடு ஆகிய துறைகளை நிர்வகித்தார்.

சீட்லா சகாய்
Sheetla Sahai
அமைச்சரவையில் அமைச்சர், மத்தியப் பிரதேச அரசு
தொகுதிகுவாலியர்
உறுப்பினர், மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
1967
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1932
இறப்பு2011
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி

அர்ச்சனா சிறீவசுத்தவா, அல்கா பிரதான் மற்றும் அச்சலா சகாய் என்று இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மறைந்த கே.என்.பிரதானின் மகன் வினோத் பிரதான் என்பவரை அல்கா மணந்தார். கே. என். பிரதான், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய காங்கிரசு தலைவர் ஆவார். மத்தியப் பிரதேசத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டாவது மக்களவையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1969 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் அமைச்சராகவும் பணியாற்றினார்.[2][3]

மேற்கோள்கள்

  1. House Pays Tribute To Sheetla Sahai - Free Press Journal பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம்
  2. Cancer Hospital Gwalior
  3. "शीतला सहाय जी". Archived from the original on 2014-07-14. Retrieved 2014-07-06.
"https://tamilar.wiki/w/index.php?title=சீட்லா_சகாய்&oldid=363312" இலிருந்து மீள்விக்கப்பட்டது