சீதா ஆறு (Seetha River) சீத்தா ஆறு என அழைக்கப்படும் ஆறானது இந்தியாவில் கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறாகும்.[1]

படிமம்:Mabukal bridge viewd from East side of farm estate.23-1-08.JPG
சீதா ஆற்றில் மாபுகல் பாலம்

ஆற்றோட்டம்

இந்த ஆறு நரசிம்ம பர்வதத்திற்கு அருகில் உருவாகி அகும்பே காடுகள் வழியாகச் சென்று ஹெப்ரி, பார்கூர் வழியே பாய்ந்து அரபிக் கடலில் சேருவதற்கு முன்பு சுவர்ணா ஆற்றில் இணைகிறது. பருவமழை காலத்தில் ஆற்றில் நீர் வரத்து அதிக அளவில் இருக்கும்.[2] இந்த ஆறும் இதன் சிறிய துணை நதிகளும் குட்லு நீர்வீழ்ச்சி, [3] பர்கானா நீர்வீழ்ச்சி, ஜோம்லு தீர்த்த நீர்வீழ்ச்சி போன்ற பல நீர்வீழ்ச்சிகளை உருவாக்கியுள்ளன. அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் ஜூன் முதல் அக்டோபர் வரை சாகச ஆர்வலர்களால் இந்த ஆற்றில் படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்

  1. "Man drowns in Sita river". The Hindu, Newspaper. 9 February 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/man-drowns-in-sita-river/article5669706.ece. பார்த்த நாள்: 2 September 2015. 
  2. "Landslides, rivers in spate as rains lash Dakshina Kannada, Udupi districts agai". Deccan Herald. 18 July 2015. http://www.deccanherald.com/content/490079/landslides-rivers-spate-rains-lash.html. பார்த்த நாள்: 2 September 2015. 
  3. "Kudlu falls: Difficult to reach but it is worth it". Deccan Herald. 27 November 2010. http://www.deccanherald.com/content/116275/kudlu-falls-difficult-reach-worth.html. பார்த்த நாள்: 2 September 2015. 
  4. "Boost for adventure sports near Hebri". The Hindu, Newspaper. 28 September 2005. 
"https://tamilar.wiki/w/index.php?title=சீதா_ஆறு&oldid=363338" இலிருந்து மீள்விக்கப்பட்டது