சூரம்பட்டி
சூரம்பட்டி (ஆங்கிலம்:Surampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைமையிடமான ஈரோடுமாநகரின் ஒரு பகுதியாகும். இது கடந்த 2007ஆம் ஆண்டு வரை தனி நகராட்சியாக செயல்பட்டு வந்தது. பின்னர் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு தற்போது மாநகரின் ஒரு மண்டலமாக செயல்பட்டு வருகிறது.
| சூரம்பட்டி மண்டலம் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 31,737 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சூரம்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஈரோடு மாநகராட்சி 3வது மண்டலம் சுமார் 27ச.கி.மீ பரப்பளவில் மொத்தம் 1,32,000 மக்கள் வசிக்கின்றனர்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,737 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சூரம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சூரம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)
மேலும் பார்க்க
- சூரம்பட்டி நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2010-07-08 at the வந்தவழி இயந்திரம்