செந்தோசா
செந்தோசா (Sentosa,சமசுகிருதம்: संतोष; எளிமையாக்கப்பட்டச் சீனம்: 圣淘沙) சிங்கப்பூரில் உள்ள, மிகவும் பரவலாக அறியப்படும், கேளிக்கைத் தீவு ஆகும். செந்தோசா என்னும் பெயர் மகிழ்ச்சி எனப்பொருள் தரும் சமக்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியது..[1][2] இங்கு ஆண்டொன்றுக்கு இருபது மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர்.[3] இங்கு 2 km (1.2 mi) நீளமுடைய கடற்கரை, சிலோசோ கோட்டை, இரண்டு குழிப்பந்தாட்ட மைதானங்கள், மெர்லயன் சிலை,14 தங்கு விடுதிகள், மற்றும் யூனிவர்சல் ஸ்டூடியோஸ் அடங்கிய செந்தோசா கேளிக்கை உலகம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.
| படிமம்:Sentosa logo.svg செந்தோசாவின் சின்னம் | |
| Slogan | ஆசியாவின் மிகவும் விரும்பப்பட்ட விளையாட்டிடம் / சிங்கப்பூரின் கேளிக்கைத் தீவு / மகிழ்ச்சி அரசு |
|---|---|
| அமைவிடம் | செந்தோசாத் தீவு |
| ஆள்கூறுகள் | 1°14′53″N 103°49′48″E / 1.248°N 103.830°E |
| கருப்பொருள் | கனவுருப் புனைவு, துணிவுச் செயல்கள் |
| திறப்பு | 1972 |
செந்தோசா | |
|---|---|
| பெயர் transcription(s) | |
| • சீனம் | 圣淘沙 |
| • பின்யின் | ஷெங்தோஷா |
| • மலாய் | செந்தோசா |
| • ஆங்கிலம் | Sentosa |
| படிமம்:Sentosa locator map.png | |
| நாடு | சிங்கப்பூர் |
இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியர்கள் ஆட்சியில் கோட்டை கட்ட இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
மேற்சான்றுகள்
- ↑ Apte, Vaman Shivaram. "The Practical Sanskrit-English Dictionary". Archived from the original on 2012-07-09. Retrieved 2011-08-15.
- ↑ Peter H Van Ness, Yoga as Spiritual but not Religious: A Pragmatic Perspective, American Journal of Theology & Philosophy, Vol. 20, No. 1 (January 1999), pages 15-30
- ↑ "Sentosa Annual Report 2012/2013". Archived from the original on 2015-09-24. Retrieved 2015-10-13.