செரோசீன்
செரோசீன் (Cerocene) என்பது Ce(C8H8)2.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு ஒரு கரிமவுலோக அணைவுச் சேர்மமாகும். செரோசீன், நடுவில் சீரியம் அணுவையும் இரண்டு வளைய ஆக்டாடெட்ராயீனைடு வளையங்களையும் கொண்டுள்ள ஓர் இடையீட்டுச் சேர்மம் ஆகும்.
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
சீரியம் டை-வளைய ஆக்டாடெட்ராயீன்
| |
| இனங்காட்டிகள் | |
| 37205-27-9 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| Ce(C8H8)2 | |
| வாய்ப்பாட்டு எடை | 348.423 |
| தோற்றம் | சிவப்பு நிறப் படிகம் |
| உருகுநிலை | 290 °செல்சியசு (சிதைவுடன்) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தயாரிப்பு
சீரியம்(III) டை-வளைய ஆக்டாடெட்ராயீன் எதிர்மின் அயனி உப்புகளைக் குறைப்பதன் மூலம் செரோசீனைத் தயாரிக்கலாம்.
- Ce(C8H8)2K → Ce(C8H8)2 + K+[1]
வேதிப் பண்புகள்
நீர் அல்லது ஆக்சிசனுக்கு வெளிப்படும் போது செரோசீன் சிதைவடைந்து விகிதவியலுக்கு ஒவ்வாத சீரியம்-ஆக்சைடுகள் மற்றும் வளைய ஆக்டா டெட்ராயீன் வழித்தோன்றல்களை உருவாக்குகிறது.[2]
இச்சேர்மம் சமச்சீரற்ற ஒரு சிதைவுக்கு உட்படுகிறது. செரோசீனுக்கும் இரண்டு சீரியம் அணுக்களைக் கொண்ட இரட்டை அடுக்கு அமைப்புக்கும் இடையில் ஒரு வேதிச்சமநிலைக்கு வழிவகுக்கிறது.[2]
- 2 Ce(C8H8)2 Ce2(C8H8)3 + C8H8
தொடர்புடைய சேர்மங்கள்
செரோசீன் என்பது யுரேனோசீனுக்கு (U(C8H8)2.) அறியப்பட்ட ஒரு முன்னோடியாகும்.[1]
Ce(C8H8)2 + UCl3 U(C8H8)2
செரோசீன் பொதுவாக திரிசு(வளையபெண்டாடையீனைல்)சீரியம் சேர்மத்துடன் இணைத்து குழப்பமடையச் செய்கிறது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Streitwieser, Andrew; Kinsley, Steven A.; Jenson, Chris Henry; Rigsbee, John T. (2004-10-01). "Synthesis and Properties of Di-π-[8annulenecerium(IV), Cerocene"] (in en). Organometallics 23 (22): 5169–5175. doi:10.1021/om049743+. பன்னாட்டுத் தர தொடர் எண்:0276-7333. https://pubs.acs.org/doi/10.1021/om049743%2B.
- ↑ 2.0 2.1 Walter, Marc D.; Booth, Corwin H.; Lukens, Wayne W.; Andersen, Richard A. (2009). "Cerocene Revisited: The Electronic Structure of and Interconversion Between Ce2(C8H8)3and Ce(C8H8)2". Organometallics 28 (3): 698–707. doi:10.1021/om7012327.