சோட்டா பீம் (Chhota Bheem) என்பது போகோ தொலைக்காட்சியில்; ஒலிபரப்பப்படும் அடைபட (animated) நிகழ்ச்சி ஆகும். இத் தொடர் ராஜ் விசுவநாதா என்பவரால் துவங்கப்பட்டது. இக்கதையின் நாயகன் பீம், கற்பனையான இந்தியச் சிற்றூரான தோலக்பூர் எனும் ஊரில் வசிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது அங்கிருக்கும் மக்களின் பிரச்சனைகளத் தனது வீரத்தினாலும், அரிவுக் கூர்மையினாலும் காப்பாற்றுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சுட்கி எனும் சிறுமி, ராஜு எனும் சிறுவன் மற்றும் ஜக்கு எனும் குரங்கு ஆகியோர் பீமின் நண்பர்களாவர்.[1]

சோட்டா பீம்
படிமம்:சோட்டா பீம்.png
வேறு பெயர்குட்டி பீமன்
வகைநகைச்சுவை, அதிரடி
இயக்கம்ராஜீவ் சுக்லா
நாடுஇந்தியா
மொழிஇந்திஆங்கிலம் தமிழ்
பருவங்கள்4
அத்தியாயங்கள்82
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்P.இரமேசு
ஓட்டம்22 minutes
தயாரிப்பு நிறுவனங்கள்green gold
ஒளிபரப்பு
அலைவரிசைபோகோ
ஒளிபரப்பான காலம்2008 –
தற்போதைய
வெளியிணைப்புகள்
இணையதளம்
தயாரிப்பு இணையதளம்

லட்டு சாப்பிட்டதும் பீமின் ஆற்றல் அதிகரிப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்‌ தொடரில் பேசப்படும் ஆங்கிலம் இந்திய ஆங்கிலமாக இருப்பதுடன் குழந்தைகளுக்கும் வெகு எளிதாகப் புரிகிறது. தோலக்பூரின் அரசர் இந்திரவர்மனும் அவரது மகள் இந்துமதியும் பீம் மீது முழு நம்பிக்கை உடையவர்கள்.

காலியா எனும் குண்டுப் பையனும் தோலக்பூரிலே வசிப்பவன். இவனுக்கு பீமின் புகழைக் கண்டு பொறாமை உண்டு. இவனது கூட்டாளிகள் போலு மற்றும் டோலு எனும் இரட்டை சகோதரர்கள், பீமை தோற்கடிக்க விரும்பும் காலியாவுக்காக திட்டங்களை வகுப்பதும் அத்திட்டங்கள் தோல்வி அடைவதுமாக இதில் காட்டப்படுகிறார்கள்.

ஆனால் இவர்கள் ஏழு பேருமே , தாங்கள் வாழும் தோலக்பூரில் பிரச்சனைகள் தோன்றும் பொழுது ஒன்றினைவதாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

கதாபாத்திரங்கள்

  • பீம் (சோட்டா பீம்) - கதாநாயகன்
  • சுட்கி - பீமின் தோழி
  • ராஜு - பீமின் நண்பர்
  • ஜக்கு (குரங்கு) - பீமின் நண்பர்
  • காலியா - பீமின் மீது பொறாமை கொண்ட நண்பன்
  • போலு - காலியாவின் கூட்டாளி
  • டோலு - காலியாவின் கூட்டாளி
  • இந்துமதி - தோலக்பூரின் இளவரசி
  • இந்திரவர்மன் - தோலக்பூரின் ராஜா
  • டுன் டுன் (ஆன்ட்டி) - சுட்கியின் தாய்

மேற்கோள்கள்

  1. "About Chhota Bheem and friends". chhotabheem.com. 30 November 2016.

keechak

mannu

"https://tamilar.wiki/w/index.php?title=சோட்டா_பீம்&oldid=373891" இலிருந்து மீள்விக்கப்பட்டது