ஜெயா
செயா (ஐ இ டி - 723) அல்லது ஜெய (ஐ இ டி - 723) (Jaya (IET-723) எனும் இது; 1969 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, இறவை சாகுபடிக்கு (நீர்ப்பாசனம்) ஏற்ற மத்தியகால நெல் வகையாகும்.[1] 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி (என்) 1 (T(N)1) என்ற நெல் இரகத்தையும், டி - 141 (T-141) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு 5000 - 6000 கிலோ (50-60 Q/ha) மகசூல் தரவல்ல இதன் நெற்பயிர், சுமார் 82 (குள்ளம்) சென்டிமீட்டர் (82 cm) உயரம் வளரக்கூடியது. மேலும், வெண்ணிறத்தில் நீண்டு தடித்து காணப்படும் இவ்வகை (குண்டு) நெல், இந்தியா முழுவதும் பயிரிட ஏற்றதாகும்.[2]
| ஜெயா Jaya |
|---|
| ஜெயா நெல் விதை ஜெயா நெல் விதை |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| டி (என்) 1 x டி - 141 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 90 - 110 நாட்கள் |
| மகசூல் |
| 5000 கிலோ |
| வெளியீடு |
| 1978 |
| நாடு |
சான்றுகள்
- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties : Page 1 - 3 - Jaya (IET-723)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-03-24.