தனீல் திமீத்ரியேவிச் தூபொவ் (Daniil Dmitrievich Dubov, உருசிய மொழி: Дании́л Дми́триевич Ду́бов; பிறப்பு: 18 ஏப்ரல் 1996) ஓர் உருசிய சதுரங்கப் பேராதன் ஆவார். இவர் 2011-ஆம் ஆண்டில் தனது 14-ஆவது அகவையில் (14 ஆண்டுகள், 11 மாதங்கள், 14 நாட்களில்) பேராதன் பட்டத்திற்கான இறுதி விதிமுறையை எட்டினார்.[1] செயிண்ட் பீட்டர்சுபுர்கில் நடைபெற்ற 2018 உலக அதிரடி சதுரங்க வாகையை தூபொவ் வென்றார்.

தனீல் தூபொவ்
Daniil Dubov
2019 இல் தூபொவ்
முழுப் பெயர்தனீல் திமீத்ரியேவிச் தூபொவ்
நாடுஉருசியா (2022)
பிறப்பு18 ஏப்ரல் 1996 (1996-04-18) (அகவை 30)
மாஸ்கோ, உருசியா
பட்டம்பேராதன் (2011)
பிடே தரவுகோள்2720 (சூலை 2024)
உச்சத் தரவுகோள்2720 (திசம்பர் 2021)
தரவரிசைஇல. 24 (சூலை 2024)
உச்சத் தரவரிசைஇல. 24 (திசம்பர் 2021)

தோகாவில் 2016-இல் இடம்பெற்ற உலக சதுரங்க மின்வல்லாட்ட வாகைப் போட்டியில் 14½/21 (+10-2=9) புள்ளிகள் எடுத்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[2][3][4]

2017-இல் உருசிய சதுரங்க வாகையில், தூபொவ் 3-ஆம், 4-ஆம் இடங்களை விளாதிமிர் பெதோசியேவ் உடன் பகிர்ந்து கொண்டார்.[5]

2018 திரம்பரில், தூபொவ் உலக அதிரடி சதுரங்க வாகைப் போட்டியில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

  1. Satrapa, James (7 August 2011). "Daniil Dubov, grandmaster at fourteen". ChessBase. Retrieved 8 August 2011.
  2. Fischer, Johannes (30 December 2016). "Sergey Karjakin is World Blitz Champion 2016". Chess News. ChessBase. Retrieved 2017-01-13.
  3. "Karjakin wins FIDE World Blitz Championship, double gold for Anna Muzychuk". Chessdom. 31 December 2016. Retrieved 2017-01-13.
  4. McGourty, Colin (31 December 2016). "Doha Blitz, Day 2: Karjakin ends 2016 as champ". chess24.com. Retrieved 2017-01-13.
  5. "Peter Svidler and Aleksandra Goryachkina are 2017 Russian Champions". Chessdom. 15 December 2017. Retrieved 2017-12-28.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=தனீல்_தூபொவ்&oldid=387786" இலிருந்து மீள்விக்கப்பட்டது