தர்சனா கே.டி (Darshana KT, பிறப்பு: நவம்பர் 6, 1994) என்பவர் ஒரு இந்திய தமிழ் பின்னணி பாடகி, இசையமைப்பாளர், இந்திய திரைப்படக் கலைஞர் ஆவார். இவர் தற்போது சிகாகோவில் வசித்து வருகிறார், மேலும் தனது இசைப் பணிக்காக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பறந்து வருகிறார்.

தர்சனா
பிறப்பு6 நவம்பர் 1984

(1984

-11-06) (அகவை 41)
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்2007–தற்போது

துவக்ககால வாழ்க்கை

தர்சனா தனது பள்ளிப் படிப்பை குவைத்தில் முடித்தார். தனது கல்வியைத் தொடர சென்னைக்கு குடிபெயர்ந்தார். சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் இதழியல் மற்றும் ஊடகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பும், சென்னை இலயோலா கல்லூரியில் ஊடக விளக்கக்காட்சி/தயாரிப்புத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இந்தக் காலகட்டத்தில் தி இந்துவில் பயிற்சியாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். பின்னர் கௌதமியிடம் ஓர் ஆண்டு உதவியாளராகப் பணியாற்றினார்.

பாடுதல்

ஐந்து வயதிலிருந்தே பாடத் தொடங்கிய இவர், குவைத்தில் குழந்தை நட்சத்திரமாக நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினார். இவரது குறிப்பிடத்தக்க இசை நிகழ்ச்சியில் 2002 ஆம் ஆண்டு இளையராஜா கலை இரவு அடங்கும். 1999 ஆம் ஆண்டு பின்னணிப் பாடகர் மனோவுடன் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தினார். 2003 ஆம் ஆண்டு சென்னைக்குத் திரும்பிய இவர், முன்னணி நிறுவனங்களுக்காக பல ஜிங்கிள்களைப் பதிவு செய்தார். 2004 மற்றும் 2006 க்கு இடையில், அண்ணாமலை, செல்வி போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களின் பாடல்களுக்கு பாடல்களைப் பாடினார். சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்தின் மகனான மணிகாந்த் கத்ரிகோபால்நாத் வெளியிட்ட பல இசைத் தொகுப்புகளிலும் இவர் பாடினார். வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் ஃபியூஷன் இசைத் தொகுப்புகளிலும் பாடினார்.

இசையின் மீது இவர் கொண்ட தீவிர ஆர்வத்தினால், இசையை தனது வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தார். ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த " சிவாஜி - தி பாஸ் " திரைப்படம் இவருக்கு முதல் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 2008 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஏ. ஆர். ரகுமான் டைம்ஸ் நவ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொண்டார். இவர் சிகாகோவின் ஓல்ட் டவுன் நாட்டுப்புற இசைப் பள்ளியில் ஜாஸ் குரல்களில் இரண்டாம் நிலையை முடித்துள்ளார். இவர் கருநாடக, இந்துஸ்தானி இசைகளையும் பயின்று வருகிறார்.

பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அழகிய தமிழ்மகன் படத்தில் தனது முதல் பாடலான " மதுரைக்கு போகதடி " பாடலுக்காக 55வது பிலிம்பேர் (தெற்கு) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் . அதே பாடலுக்காக 2007 ஆம் ஆண்டில் "மை தமிழ் மூவி.காம்" விருதையும் பெற்றார்.

திரைப்படப் பாடல்களில் கவனம் செலுத்துவது அல்லாமல், இவர் ஒரு சுயாதீன பாடலாசிரியராகவும்/இசையமைப்பாளராகவும் இயங்கிவருகிறார்.

இசையமைப்பாளராக

ஆண்டு திரைப்படம் மொழி
2023 சில நொடிகளில் தமிழ்

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் மொழி இசையமைப்பாளர் பாடல்
2024 கேப்டன் மில்லர் தெலுங்கு ஜி. வி. பிரகாஷ் குமார் பலநாடி
2023 சில நொடிகளில் தமிழ் தர்சனா கே.டி. தொலை வானம்
2021 கலாட்டா கல்யாணம் தமிழ் ஏ. ஆர். ரகுமான் சூறாவாளி பொண்ணு
2019 காப்பான் தமிழ் ஹாரிஸ் ஜயராஜ் குறிலே குறிலே
2017 மேயாத மான் தமிழ் பிரதீப் குமார் நீ மட்டும் போதும்
2017 மாம் இந்தி ஏ. ஆர். ரகுமான் மௌஃபி முஷ்கில்
2017 பைரவா தமிழ் சந்தோஷ் நாராயணன் அழகிய சூடான பூவே
2015 ஓ காதல் கண்மணி தமிழ் ஏ. ஆர். ரகுமான் காரா ஆட்டக்கார
2015 தமிழ் தீரா உலா
2015 சரி பங்காரம் தெலுங்கு (மொழிமாற்றுப் பதிப்பு) ராரா ஆட்டகாடா
2015 நீதோ அலா
2015 மென்டல் மதிலோ
2012 பீட்சா தமிழ் சந்தோஷ் நாராயணன் எங்கோ ஓடுகின்றாய்
2011 உதயன் தமிழ் மணிகாந்த் கத்ரி லக்கா லக்கா
2011 பொன்னர் சங்கர் தமிழ் இளையராஜா மலர் வில்லாலே
2011 காஞ்சனா: முனி 2 தமிழ் எஸ். தமன் கருப்புப் பேரழகா
2009 வெடிகுண்டு முருகேசன் தமிழ் தினா காபி கொட்டை
2009 புலூ இந்தி ஏ. ஆர். ரகுமான்
2008 யுவராஜ் இந்தி
2008 ஜானே து யா ஜானே நா இந்தி பப்பு கெனாட் டான்ஸ் சாலா.
2008 இந்தி நஸ்ரீன் மிலானா
2007 சிவாஜி – தி பாஸ் தமிழ்/இந்தி (மொழியாக்கப் பதிப்பு) வாஜி வாஜி
2007 பல்லேலகா
2007 குரு (2007 திரைப்படம்) தெலுங்கு (மொழியாக்கப் பதிப்பு) / இந்தி மய்யா மய்யா
2007 பாஸி லகா
2007 அதிதி தெலுங்கு மணிசர்மா வல்ல வல்லா
2007 அழகிய தமிழ்மகன் தமிழ் ஏ. ஆர். ரகுமான் மதுரைக்குப் போகத்தடி

சுயாதீன தனிப்பாடல்/ஆல்பம்

ஆண்டு இசையமைப்பாளர் பாடல் மொழி
2014 கே.டி. வான் திறக்கின்ற பொழுதில் தமிழ்
2012 கே.டி. உன்னை நினைத்தேன் தமிழ்

விருதுகளும் பரிந்துரைகளும்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தர்சனா_கேடி&oldid=391129" இலிருந்து மீள்விக்கப்பட்டது